• Nov 28 2024

மூதூரில் வெள்ளம் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Tharmini / Nov 28th 2024, 11:14 am
image

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மூதூர் சிங்கள மகா வித்தியாலயம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலை வளாகத்தினுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

மூதூர் -அறபாநகர்,பாலநகர்,ஆனைச்சேனை,ஜாயா வீதி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.

தோப்பூர்,மூதூர்,சம்பூர்,இருதயபுரம்,மல்லிகைத்தீவு,பள்ளிக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுமார் 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன.

மூதூர் கட்டைப்படைச்சான் இறால் பாலத்தை மேவி சுமார் 3 அடியில் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது.இதனால் கடற்படையினர் பிரியாணிகளை படகுமூலம் ஏற்றி இறக்கி வருகின்றனர்.

மூதூர் மணிக்கூட்டு கோபுர வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் வீதியூடாக பயணிதையும் காண முடிந்தது. 





 


மூதூரில் வெள்ளம் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்பு கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் மூதூர் சிங்கள மகா வித்தியாலயம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலை வளாகத்தினுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.மூதூர் -அறபாநகர்,பாலநகர்,ஆனைச்சேனை,ஜாயா வீதி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.தோப்பூர்,மூதூர்,சம்பூர்,இருதயபுரம்,மல்லிகைத்தீவு,பள்ளிக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுமார் 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன.மூதூர் கட்டைப்படைச்சான் இறால் பாலத்தை மேவி சுமார் 3 அடியில் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது.இதனால் கடற்படையினர் பிரியாணிகளை படகுமூலம் ஏற்றி இறக்கி வருகின்றனர்.மூதூர் மணிக்கூட்டு கோபுர வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் வீதியூடாக பயணிதையும் காண முடிந்தது.  

Advertisement

Advertisement

Advertisement