• May 03 2024

இலங்கையில் மூன்று ஆண்டுகளின் பின்னர் பூத்த மலர்! samugammedia

Chithra / Apr 22nd 2023, 6:55 am
image

Advertisement

ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மைதானத்தில் நடப்பட்ட சகுரா மரம் மலர்ந்துள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.


2017ஆம் ஆண்டு ஜப்பான் - இலங்கை ஒத்துழைப்பின் அடிப்படையில் பேராசிரியர் ஆனந்த குமாரவினால் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு சகுரா மரம் வரவழைக்கப்பட்டு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மைதானத்தில் பரிசோதனையாக நடப்பட்டுள்ளது.


பதுளை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வளாகத்தில் சகுரா மலர்களை நடுவதற்கு பொருத்தமான தட்பவெப்ப நிலை காணப்பட்டதையடுத்து ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட சகுரா செடியை நாட்டியதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.


இந்த சகுரா மலர் 2020ல் பூத்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை சகுரா மலர் பூத்துள்ளது என்றும் துணைவேந்தர் கூறியுள்ளார்.



இலங்கையில் மூன்று ஆண்டுகளின் பின்னர் பூத்த மலர் samugammedia ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மைதானத்தில் நடப்பட்ட சகுரா மரம் மலர்ந்துள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.2017ஆம் ஆண்டு ஜப்பான் - இலங்கை ஒத்துழைப்பின் அடிப்படையில் பேராசிரியர் ஆனந்த குமாரவினால் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு சகுரா மரம் வரவழைக்கப்பட்டு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மைதானத்தில் பரிசோதனையாக நடப்பட்டுள்ளது.பதுளை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வளாகத்தில் சகுரா மலர்களை நடுவதற்கு பொருத்தமான தட்பவெப்ப நிலை காணப்பட்டதையடுத்து ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட சகுரா செடியை நாட்டியதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.இந்த சகுரா மலர் 2020ல் பூத்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை சகுரா மலர் பூத்துள்ளது என்றும் துணைவேந்தர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement