• Apr 20 2025

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளனர்! பிரதி அமைச்சர் எச்சரிக்கை

Chithra / Apr 16th 2025, 10:20 am
image

 

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட உள்ளதாகவும்  இவ்வாறானவர்கள் தொடர்பிலான நீண்ட பட்டியலொன்று காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் எவரும் தாம் குற்றம் இழைத்து விட்டதாக கூறுவதில்லை. தான் திருடியதாகவோ அல்லது கொள்ளையடித்ததாகவோ எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

கைது செய்யப்படு நபர்கள் அரசியல் பழிவாங்கல் என தங்களது குற்றங்களை நியாயப்படுத்தி வருவதாகவும் ஊடகங்களில் இவ்வாறு கூறினாலும் நீதிபதியின் முன்னிலையில் இவ்வாறு அரசியல் பழிவாங்கல் என கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்பட்டதன் பின்னர் இவ்வாறு பழி சுமத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளனர் பிரதி அமைச்சர் எச்சரிக்கை  பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட உள்ளதாகவும்  இவ்வாறானவர்கள் தொடர்பிலான நீண்ட பட்டியலொன்று காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் எவரும் தாம் குற்றம் இழைத்து விட்டதாக கூறுவதில்லை. தான் திருடியதாகவோ அல்லது கொள்ளையடித்ததாகவோ எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.கைது செய்யப்படு நபர்கள் அரசியல் பழிவாங்கல் என தங்களது குற்றங்களை நியாயப்படுத்தி வருவதாகவும் ஊடகங்களில் இவ்வாறு கூறினாலும் நீதிபதியின் முன்னிலையில் இவ்வாறு அரசியல் பழிவாங்கல் என கூற முடியாது என தெரிவித்துள்ளார்.மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்பட்டதன் பின்னர் இவ்வாறு பழி சுமத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement