முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.
உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
நேற்று முதல் இந்த நான்கு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிஉத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசபந்து தென்னகோனை கைது செய்ய மேலும் நான்கு விசாரணைக் குழுக்கள் நியமனம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. நேற்று முதல் இந்த நான்கு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிஉத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.