• Nov 28 2024

யாழில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் இலவச சட்ட ஆலோசனை முகாம் முன்னெடுப்பு...!

Sharmi / May 3rd 2024, 3:14 pm
image

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்துடன் இணைந்து சட்ட ஆலோசனை முகாம் மற்றும் நடமாடும் இலவச சேவை முகாம் இன்றையதினம்(03) இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டதரணி அம்பிகா ஹீதரன்  கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

அதேவேளை  சட்டத்தரணி சாருஜா சிவநேசன்,பாதிக்கப்பட்ட மக்களிற்கான சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் ஊர்காவற்துறை உதவி பிரதேச செயலர் பிரணவஜோதி , நிர்வாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராம உத்தியோகஸ்தர்கள், ஆட்பதிவு  திணைக்கள அதிகாரிகள், பதிவாளர் கிளை உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான், ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர்   பாதிக்கப்பட்ட ஊர்காவற்துறை பிரதேச செயலக மக்களுக்கு  தமது சேவையை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



யாழில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் இலவச சட்ட ஆலோசனை முகாம் முன்னெடுப்பு. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்துடன் இணைந்து சட்ட ஆலோசனை முகாம் மற்றும் நடமாடும் இலவச சேவை முகாம் இன்றையதினம்(03) இடம்பெற்றது.ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டதரணி அம்பிகா ஹீதரன்  கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.அதேவேளை  சட்டத்தரணி சாருஜா சிவநேசன்,பாதிக்கப்பட்ட மக்களிற்கான சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.இதில் ஊர்காவற்துறை உதவி பிரதேச செயலர் பிரணவஜோதி , நிர்வாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது கிராம உத்தியோகஸ்தர்கள், ஆட்பதிவு  திணைக்கள அதிகாரிகள், பதிவாளர் கிளை உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான், ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர்   பாதிக்கப்பட்ட ஊர்காவற்துறை பிரதேச செயலக மக்களுக்கு  தமது சேவையை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement