• May 20 2024

அரசாங்கம் முதற்கொண்டு சிங்கள மக்கள் வரை இலங்கை பௌத்த நாடு என்றே உலகிற்கு காட்ட விளைகின்றது- சரவணபவன் கருத்து!samugammedia

Sharmi / Mar 30th 2023, 3:10 pm
image

Advertisement

இலங்கையை அரசாங்கம் முதல் கொண்டு சிங்கள மக்கள் வரை பௌத்த நாடு என உலகிற்கு அடையாளப்படுத்த விளைவதாகவும், தமிழர்களை அடித்து சித்திரவதை செய்ய முடியாத சூழலினால் முக்கிய சரித்திர இடங்களை அழிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாவில்  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

புராதன சின்னங்களான வழிபாட்டு தலங்களை அட்டவணை போட்டு அழிப்பதாகவும் முதலில் காலினை ஊன்றி பின்னர் தாமாக விலகி இறுதியில் வேறு ஒருவரை வைத்து அழிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதியிடமோ அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சரிற்கோ தெரிவித்தல் மீண்டும் அமைத்து தருவதாகவே கூறுவார்கள்.

குறுந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பினையும் மீறி விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டி காட்டியுள்ளார்.

அரசாங்கம் முதல் கொண்டு சிங்கள மக்கள் வரை இலங்கை பௌத்த நாடு என்றே உலகிற்கு காட்ட  விளைவதாகவும், ஆனால் ஆதிகாலம் முதலே இலங்கையில் வாழ்ந்து வருபவர்கள் தமிழர்கள் என்பதுடன் அவ் வரலாற்றினை திரிவுபடுத்துவதுடன், அழிப்பதாகவும் கூறியுள்ளார்.

சைவசமயத்தவர்கள் ஈமச்சடங்கு செய்யும் கண்ணியா ஊற்றினையும் தற்பொழுது ஆக்கிரமித்து புது வரவிலக்கணங்கள் கூறுவதாகவும், நெடுந்தீவிலும் சிங்களத்தில் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளிற்கு வலுச்சேர்க்கும் முகமாக விமல் வீரவன்சவும் தமிழர்களிற்கு இடமில்லையென குரலினை உயர்த்துவதாகவும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்திலும் மற்றும் ஜெயவர்த்தனாவும் இவ்வாறு முன்னர் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

தற்பொழுது, மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் முன்னிற்பாதல் தமிழர்களிற்கு அடிக்க முடியாதென்பதால், வழிபாட்டு தளங்களுடன் சரித்திர ரீதியான இடங்களை அழிப்பதுடன் அங்கு புத்தர் சிலையினையோ அல்லது விகாரையினையோ அமைத்து விட்டு வரலாற்று தொல்லியல் திணைக்களமும் கதை கூறுவதாக கோபம் வெளியிட்டுள்ளார்.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகளால் எதிர்கால சந்ததியிற்கு தெளிவில்லாத வரலாறே சென்றைய இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இன்று இடம்பெறும் போராட்டம் ஓரளவு வெற்றியாக இருப்பதாகவும் இதனை நடத்த வேண்டிய அரசாங்க அதிபர் இல்லை எனவும் கூறியிருந்தார்.

அன்று நாம் தோற்பதற்கு உதவி புரித்தோர் ,நாம் இந்த நாட்டில் உரிமையுடனும், கௌரத்துடனும் வாழ்வோம் என்று  கூறினார்கள் அது இப்பொழுது எங்கு சென்று விட்டதென  உதவி செய்த நாடுகளை கேட்டுக்கொள்வதாகவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசாங்கம் முதற்கொண்டு சிங்கள மக்கள் வரை இலங்கை பௌத்த நாடு என்றே உலகிற்கு காட்ட விளைகின்றது- சரவணபவன் கருத்துsamugammedia இலங்கையை அரசாங்கம் முதல் கொண்டு சிங்கள மக்கள் வரை பௌத்த நாடு என உலகிற்கு அடையாளப்படுத்த விளைவதாகவும், தமிழர்களை அடித்து சித்திரவதை செய்ய முடியாத சூழலினால் முக்கிய சரித்திர இடங்களை அழிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாவில்  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், புராதன சின்னங்களான வழிபாட்டு தலங்களை அட்டவணை போட்டு அழிப்பதாகவும் முதலில் காலினை ஊன்றி பின்னர் தாமாக விலகி இறுதியில் வேறு ஒருவரை வைத்து அழிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியிடமோ அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சரிற்கோ தெரிவித்தல் மீண்டும் அமைத்து தருவதாகவே கூறுவார்கள். குறுந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பினையும் மீறி விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டி காட்டியுள்ளார். அரசாங்கம் முதல் கொண்டு சிங்கள மக்கள் வரை இலங்கை பௌத்த நாடு என்றே உலகிற்கு காட்ட  விளைவதாகவும், ஆனால் ஆதிகாலம் முதலே இலங்கையில் வாழ்ந்து வருபவர்கள் தமிழர்கள் என்பதுடன் அவ் வரலாற்றினை திரிவுபடுத்துவதுடன், அழிப்பதாகவும் கூறியுள்ளார். சைவசமயத்தவர்கள் ஈமச்சடங்கு செய்யும் கண்ணியா ஊற்றினையும் தற்பொழுது ஆக்கிரமித்து புது வரவிலக்கணங்கள் கூறுவதாகவும், நெடுந்தீவிலும் சிங்களத்தில் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளிற்கு வலுச்சேர்க்கும் முகமாக விமல் வீரவன்சவும் தமிழர்களிற்கு இடமில்லையென குரலினை உயர்த்துவதாகவும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்திலும் மற்றும் ஜெயவர்த்தனாவும் இவ்வாறு முன்னர் கூறியிருப்பதாக தெரிவித்தார். தற்பொழுது, மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் முன்னிற்பாதல் தமிழர்களிற்கு அடிக்க முடியாதென்பதால், வழிபாட்டு தளங்களுடன் சரித்திர ரீதியான இடங்களை அழிப்பதுடன் அங்கு புத்தர் சிலையினையோ அல்லது விகாரையினையோ அமைத்து விட்டு வரலாற்று தொல்லியல் திணைக்களமும் கதை கூறுவதாக கோபம் வெளியிட்டுள்ளார். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளால் எதிர்கால சந்ததியிற்கு தெளிவில்லாத வரலாறே சென்றைய இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.இன்று இடம்பெறும் போராட்டம் ஓரளவு வெற்றியாக இருப்பதாகவும் இதனை நடத்த வேண்டிய அரசாங்க அதிபர் இல்லை எனவும் கூறியிருந்தார். அன்று நாம் தோற்பதற்கு உதவி புரித்தோர் ,நாம் இந்த நாட்டில் உரிமையுடனும், கௌரத்துடனும் வாழ்வோம் என்று  கூறினார்கள் அது இப்பொழுது எங்கு சென்று விட்டதென  உதவி செய்த நாடுகளை கேட்டுக்கொள்வதாகவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement