• Mar 28 2024

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை! samugammedia

Tamil nila / May 31st 2023, 7:02 pm
image

Advertisement

நாட்டின் பல இடங்களில் மீண்டும் எரிபொருள் வரிசையை காணக்கூடியதாக இருக்கிறது.

இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை குறைவடையும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால் பல்வேறு நகர் பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையை காணக்கூடியதாக இருந்ததாக  செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலை குறையும் என்பதால் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவை தாமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை குறைவடையும்?

ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருகின்ற நிலையில், அதன் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருப்பதாக நிதியமைச்சின் பேச்சாளர்  தெரிவித்தார்.

அதனடிப்படையில் பல்வேறு பொருட்கள் சேவைகளின் விலைகள் இம்மாதம் குறைவடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைவடையவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தத் தகவலை வழங்கியுள்ளனர்.

உலக சந்தையில் மசகெண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.

கடந்த ஒரு வார காலப்பகுதியில் இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியும் ஏறத்தாழ 15 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை samugammedia நாட்டின் பல இடங்களில் மீண்டும் எரிபொருள் வரிசையை காணக்கூடியதாக இருக்கிறது.இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை குறைவடையும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.இந்த நிலையில் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதனால் பல்வேறு நகர் பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையை காணக்கூடியதாக இருந்ததாக  செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எரிபொருள் விலை குறையும் என்பதால் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவை தாமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை குறைவடையும்ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருகின்ற நிலையில், அதன் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருப்பதாக நிதியமைச்சின் பேச்சாளர்  தெரிவித்தார்.அதனடிப்படையில் பல்வேறு பொருட்கள் சேவைகளின் விலைகள் இம்மாதம் குறைவடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைவடையவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தத் தகவலை வழங்கியுள்ளனர்.உலக சந்தையில் மசகெண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.கடந்த ஒரு வார காலப்பகுதியில் இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியும் ஏறத்தாழ 15 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement