• May 03 2024

மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை: எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு samugammedia

Chithra / Mar 29th 2023, 6:42 am
image

Advertisement

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் விநியோகம் தொடர்வதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொலிஸாருக்கும் ஆயுதப்படையினரும் எரிபொருள் களஞ்சியத்தை பாதுகாத்து விநியோக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க ஊழியர்களை கடமைக்கு செல்லவிடாமல் தடுத்ததால் எரிபொருள் விநியோகத்தில் வழக்கமான தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெட்ரோலிய ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை: எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு samugammedia எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் விநியோகம் தொடர்வதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பொலிஸாருக்கும் ஆயுதப்படையினரும் எரிபொருள் களஞ்சியத்தை பாதுகாத்து விநியோக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தொழிற்சங்க ஊழியர்களை கடமைக்கு செல்லவிடாமல் தடுத்ததால் எரிபொருள் விநியோகத்தில் வழக்கமான தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இதேவேளை, பெட்ரோலிய ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement