• Sep 08 2024

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்! வெளியானது அதிர்ச்சி அறிவிப்பு samugammedia

Chithra / Mar 28th 2023, 9:28 pm
image

Advertisement


பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொலன்னாவை முனையத்திலிருந்து எரிபொருள் விநியோகம் இன்று நண்பகல் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக பெட்ரோலிய பொது சேவை சங்கம் இன்று முற்பகல் அறிவித்தது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக நேற்று முதல் பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துள்ளனர். 

நிறைவேற்று உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் தவிர ஏனைய தொழிற்சங்கங்கள் இந்த சத்தியாகிரகத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் வெளியானது அதிர்ச்சி அறிவிப்பு samugammedia பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொலன்னாவை முனையத்திலிருந்து எரிபொருள் விநியோகம் இன்று நண்பகல் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக பெட்ரோலிய பொது சேவை சங்கம் இன்று முற்பகல் அறிவித்தது.பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக நேற்று முதல் பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துள்ளனர். நிறைவேற்று உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் தவிர ஏனைய தொழிற்சங்கங்கள் இந்த சத்தியாகிரகத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement