• Apr 24 2024

தமிழர் பகுதிகளில் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம்! - வெளியான தகவல் samugammedia

Chithra / Mar 28th 2023, 3:42 pm
image

Advertisement

பெட்ரோலிய தொழில்சங்க ஒன்றியத்தினர் கொலன்னாவை பெற்றோலிய முனையத்துக்கு முன்பாக ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் தவிர்ந்த ஏனைய தொழிற்சங்கங்கள் இந்த சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ளன.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் சேவையை பெற்றுக்கொள்ளும் அதிக வருமானம் கொண்ட சுமார் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நான்கு சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தொழில் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனைத்தவிர, வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள இந்திய ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கான எண்ணெய் விநியோகத்தை நிறுத்துமாறும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழர் பகுதிகளில் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் - வெளியான தகவல் samugammedia பெட்ரோலிய தொழில்சங்க ஒன்றியத்தினர் கொலன்னாவை பெற்றோலிய முனையத்துக்கு முன்பாக ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.நிறைவேற்று உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் தவிர்ந்த ஏனைய தொழிற்சங்கங்கள் இந்த சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ளன.பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் சேவையை பெற்றுக்கொள்ளும் அதிக வருமானம் கொண்ட சுமார் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நான்கு சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தொழில் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இதனைத்தவிர, வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள இந்திய ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கான எண்ணெய் விநியோகத்தை நிறுத்துமாறும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement