அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதாக கேட்ஸ் மன்றம் உறுதியளித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கேட்ஸ் மன்றத்தினால் இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய மேம்படுத்துதல்,பாடசாலை மதிய உணவு வழங்குதல் உள்ளிட்ட குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துதல், அரச மற்றும் தனியார் துறைகளில் மனித வளங்களை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றம் போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சந்தித்த சமரநாயக்க, அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு நிதி, தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை ஆதரவை வழங்குவதற்கு கேட்ஸ் மன்றம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகேயும் கலந்து கொண்டார்.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு கேட்ஸ் மன்றம் ஆதரவு. அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதாக கேட்ஸ் மன்றம் உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.கேட்ஸ் மன்றத்தினால் இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய மேம்படுத்துதல்,பாடசாலை மதிய உணவு வழங்குதல் உள்ளிட்ட குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துதல், அரச மற்றும் தனியார் துறைகளில் மனித வளங்களை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றம் போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.புதிய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சந்தித்த சமரநாயக்க, அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு நிதி, தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை ஆதரவை வழங்குவதற்கு கேட்ஸ் மன்றம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகேயும் கலந்து கொண்டார்.