• May 17 2024

ஜெர்மனியின் நெருக்கடி நிலை: கைகொடுத்த முக்கிய நாடு!

Sharmi / Dec 1st 2022, 10:54 pm
image

Advertisement

ஜேர்மனிக்கு இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கான 15 வருட ஒப்பந்தத்திற்கு கத்தார் ஒப்புக்கொண்டுள்ளது.

2026 முதல் ஜேர்மனிக்கு 2 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று அதன் தலைமை நிர்வாகியும், கத்தாரின் எரிசக்தி அமைச்சருமான சாத் ஷெரிடா அல்-காபி  தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறித்த  ஒப்பந்தமானது ConocoPhillips நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. 

ஜேர்மனி ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிவாயு சந்தையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதன் ஆற்றல் பாதுகாப்பை ஆதரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஜேர்மன் நிறுவனங்களுடன் கூடுதல் எரிவாயுவை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அவர் கூறினார்.

உக்ரைன் மீதான தங்கள் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு பதிலடியாக ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகளை ரஷ்யா குறைத்த பின்னர், மாற்று எரிவாயு விநியோகங்களை பாதுகாக்க ஜேர்மனி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியின் நெருக்கடி நிலை: கைகொடுத்த முக்கிய நாடு ஜேர்மனிக்கு இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கான 15 வருட ஒப்பந்தத்திற்கு கத்தார் ஒப்புக்கொண்டுள்ளது.2026 முதல் ஜேர்மனிக்கு 2 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று அதன் தலைமை நிர்வாகியும், கத்தாரின் எரிசக்தி அமைச்சருமான சாத் ஷெரிடா அல்-காபி  தெரிவித்துள்ளார்.எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி மேலும் தெரிவித்துள்ளதாவது,குறித்த  ஒப்பந்தமானது ConocoPhillips நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. ஜேர்மனி ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிவாயு சந்தையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதன் ஆற்றல் பாதுகாப்பை ஆதரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஜேர்மன் நிறுவனங்களுடன் கூடுதல் எரிவாயுவை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அவர் கூறினார்.உக்ரைன் மீதான தங்கள் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு பதிலடியாக ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகளை ரஷ்யா குறைத்த பின்னர், மாற்று எரிவாயு விநியோகங்களை பாதுகாக்க ஜேர்மனி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement