• May 02 2024

கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகை இதோ!

Tamil nila / Dec 1st 2022, 10:47 pm
image

Advertisement

கொள்ளு தோசையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று.


எமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும் சக்தி கொள்ளு தோசைக்கு உண்டு என மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறித்த தோசையில், வைட்டமின்கள்,புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. கொள்ளு எடையை மட்டும் இல்லை நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக சிறந்த உணவு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாகாமல் கொள்ளு வைத்துக்கொள்ளும்.  கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் உணவு வகையை சேர்ந்ததால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.  


உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் கொள்ளில்  நிறைந்துள்ளன.இத்தகைய சக்திவாய்ந்த கொள்ளை சேர்த்து தோசை செய்து ருசிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

 

மொறு மொறு கொள்ளு தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் 

 அரிசி - 1 கப்

 கம்பு - 1 கப் 

 கொள்ளு - கால் கப் 

 காய்ந்த மிளகாய் - 5

 வெந்தயம் - 1 டீஸ்பூன் 

 உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளுங்கள்.


கொள்ளு தோசை செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரிசி மற்றும் வெந்தயத்தை 4 மணிநேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள். அதேபோல கொள்ளு, கம்பை இரண்டையும் 8 மணிநேரம் ஊறவைத்து எடுங்கள்.


இவை அனைத்துமே நன்றாக ஊறியதும் முதலில் அரிசி மற்றும் வெந்தயத்தை அரைத்து எடுத்து வையுங்கள்.பிறகு கொள்ளு, கம்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.


அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்க விடவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தோசைகளாக ஊற்றி எடுக்கவும். சுவையான மொறு மொறு தோசை தயார். கடைகளில் வாங்குவதை பார்க்கவும் இதில் சுவை அதிகம்.


இதனை நமது குடும்ப அங்கத்தவர்களுக்கும் செய்து கொடுப்பதுடன்,சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,நண்பர்கள் குறித்த தோசை செய்யும் விதத்தினையும்,இதனால் ஏற்படும் நன்மைகளையும் பகிர்ந்து கொள்ளுவோம்.

கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகை இதோ கொள்ளு தோசையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று.எமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும் சக்தி கொள்ளு தோசைக்கு உண்டு என மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தோசையில், வைட்டமின்கள்,புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. கொள்ளு எடையை மட்டும் இல்லை நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக சிறந்த உணவு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாகாமல் கொள்ளு வைத்துக்கொள்ளும்.  கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் உணவு வகையை சேர்ந்ததால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் கொள்ளில்  நிறைந்துள்ளன.இத்தகைய சக்திவாய்ந்த கொள்ளை சேர்த்து தோசை செய்து ருசிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம். மொறு மொறு கொள்ளு தோசை செய்வது எப்படிதேவையான பொருட்கள்  அரிசி - 1 கப் கம்பு - 1 கப்  கொள்ளு - கால் கப்  காய்ந்த மிளகாய் - 5 வெந்தயம் - 1 டீஸ்பூன்  உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளுங்கள்.கொள்ளு தோசை செய்முறைமுதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரிசி மற்றும் வெந்தயத்தை 4 மணிநேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள். அதேபோல கொள்ளு, கம்பை இரண்டையும் 8 மணிநேரம் ஊறவைத்து எடுங்கள்.இவை அனைத்துமே நன்றாக ஊறியதும் முதலில் அரிசி மற்றும் வெந்தயத்தை அரைத்து எடுத்து வையுங்கள்.பிறகு கொள்ளு, கம்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்க விடவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தோசைகளாக ஊற்றி எடுக்கவும். சுவையான மொறு மொறு தோசை தயார். கடைகளில் வாங்குவதை பார்க்கவும் இதில் சுவை அதிகம்.இதனை நமது குடும்ப அங்கத்தவர்களுக்கும் செய்து கொடுப்பதுடன்,சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,நண்பர்கள் குறித்த தோசை செய்யும் விதத்தினையும்,இதனால் ஏற்படும் நன்மைகளையும் பகிர்ந்து கொள்ளுவோம்.

Advertisement

Advertisement

Advertisement