• May 03 2024

FIFA உலக கிண்ண போட்டியில் அதிரடியாக களம் இறங்கிய பெண்கள்!

Sharmi / Dec 1st 2022, 10:45 pm
image

Advertisement

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.

அல்பேட் மைதானத்தில் ஜெர்மனி - கோஸ்டாரிகா அணிகள் மோதும் போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர் பங்கேற்க உள்ளார்.

குறித்த  பெருமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 38 வயதான ஸ்டெபானி ப்ராபர்ட் பெற்றுள்ளார்.

இவருக்கு துணையாக பிரேசிலை சேர்ந்த  நியூசாபேக் மற்றும், மெக்சிகோவை சேர்ந்த  கரேன் தியாஸ் மெடினா ஆகிய பெண்களும் பணியாற்ற உள்ளனர்.

குறித்த  தகவலை, உலக் கால்பந்து போட்டிகளுக்கான நடுவர்களின் தலைவர் பியர்ளுகி கொலினா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

FIFA உலக கிண்ண போட்டியில் அதிரடியாக களம் இறங்கிய பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.அல்பேட் மைதானத்தில் ஜெர்மனி - கோஸ்டாரிகா அணிகள் மோதும் போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர் பங்கேற்க உள்ளார்.குறித்த  பெருமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 38 வயதான ஸ்டெபானி ப்ராபர்ட் பெற்றுள்ளார்.இவருக்கு துணையாக பிரேசிலை சேர்ந்த  நியூசாபேக் மற்றும், மெக்சிகோவை சேர்ந்த  கரேன் தியாஸ் மெடினா ஆகிய பெண்களும் பணியாற்ற உள்ளனர்.குறித்த  தகவலை, உலகக் கால்பந்து போட்டிகளுக்கான நடுவர்களின் தலைவர் பியர்ளுகி கொலினா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement