• Dec 18 2025

மோட்டார் சைக்கிள், டிப்பருடன் மோதியதில் சிறுமி பலி! தாய், சகோதரி படுகாயம்

Chithra / Dec 16th 2025, 10:39 am
image

களுத்துறை - ஹொரணை திக்கென்புர பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் லொறியில் மோதியதில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தனது இரண்டு பிள்ளைகளுடன் தாய் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.


நேற்று காலை, ஹொரணையிலிருந்து இங்கிரிய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஹொரணை நகர சபைக்குச் சொந்தமான குப்பைகளை ஏற்றிச் செல்லும் டிராக்டரைக் கடக்க முயன்ற போது, ​​டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


மோட்டார் சைக்கிள் டிப்பர் லொறியின் பின்புற வலது சக்கரத்தில் மோதியதால், மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தாயும், உயிரிழந்த சிறுமியின் நான்கு வயது சகோதரியும் விபத்தில் காயமடைந்து ஹொரணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவர் ஹொரணை இலிம்பாவை சேர்ந்த, டொம்பெட்ரிக் கல்லூரியில் 4ஆம் வகுப்பில் படித்து வந்த சந்தலி இமாயா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


டிப்பர் லொறியின் சாரதி  கைது செய்யப்பட்ட நிலையில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள், டிப்பருடன் மோதியதில் சிறுமி பலி தாய், சகோதரி படுகாயம் களுத்துறை - ஹொரணை திக்கென்புர பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் லொறியில் மோதியதில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனது இரண்டு பிள்ளைகளுடன் தாய் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.நேற்று காலை, ஹொரணையிலிருந்து இங்கிரிய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஹொரணை நகர சபைக்குச் சொந்தமான குப்பைகளை ஏற்றிச் செல்லும் டிராக்டரைக் கடக்க முயன்ற போது, ​​டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.மோட்டார் சைக்கிள் டிப்பர் லொறியின் பின்புற வலது சக்கரத்தில் மோதியதால், மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தாயும், உயிரிழந்த சிறுமியின் நான்கு வயது சகோதரியும் விபத்தில் காயமடைந்து ஹொரணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர் ஹொரணை இலிம்பாவை சேர்ந்த, டொம்பெட்ரிக் கல்லூரியில் 4ஆம் வகுப்பில் படித்து வந்த சந்தலி இமாயா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.டிப்பர் லொறியின் சாரதி  கைது செய்யப்பட்ட நிலையில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement