• May 21 2024

ஒரு வாக்கையாவது எங்களுக்கு வழங்குங்கள் - உமா சந்திரா யாழில் வேண்டுகோள்

Chithra / Jan 8th 2023, 1:03 pm
image

Advertisement


இலங்கை வரலாற்றில் முதன் முறையாக எதிர்கட்சி ஒன்று ஆளும் கட்சியைப்போன்று செயற்பட்டு வருவதாக

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் உமா சந்திரா பிரகாஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் இலங்கை மக்களின் மனங்களை வென்ற தலைவராக இருக்கின்றார். எதிர்க்கட்சி என்ற வகையிலே இலங்கை சுதந்திரமடைந்த பின் ஆளுங்கட்சியை விமர்சிப்பது மட்டுமே செயற்பாடாக இருந்த நிலையை மாற்றி எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளது என்பதை நிரூபித்த தலைவராக வரலாற்றிலே இடம்பிடித்துள்ளார்.

அந்த வகையிலே கொரோனாத் தொற்றுக் காலகட்டத்தில் வைத்தியசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களாகட்டும் பாடசாலைக்குத் தேவையான உபகரணங்களாகட்டும், அண்மையிலே பாடசாலை மாணவர்களுக்கு பேரூந்துகளை வழங்கும் செயற்திட்டமாகட்டும் மக்கள் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்துவரும் தலைவராக விளங்குகின்றார். 

அதே நேரத்தில் இன மத மொழி கடந்து அனைத்து மக்களும் சமமாக  வாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கக்கூடிய தலைவராக சஜித் பிரேமதாசா நம்பிக்கையுடன் இருக்கின்றார் 

2023 உள்ளூராட்சி தேர்தல் என்பது அனைவருக்கும் பிரதான தேர்தல் ஏனெனில்  இலஞ்சம் ஊழலற்ற வெளிப்படைத் தன்மையாக மக்கள் ஆணையை முன்னிறுத்தக்கூடிய முதலாவது தேர்தலாக இதைப் பார்க்கின்றோம். 

எங்களுடைய கட்சி ஆரம்பிக்கப்பட்டு வெறும் மூன்று வருடங்களாகக் காணப்பட்டாலும் பாரிய வளர்ச்சி கண்டுள்ளோம். எனவே  இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே பல புதிய முகங்கள்., இளைய தலைமுறையினர், பெண்கள், துறைசார் வல்லுனர்களோடு அரசியல் துறைகளிலே சிறப்பாகச் செயற்படுபவர்களையும் இணைத்துக்கொண்டு, எங்களுடைய அரசியல் பயணம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல் மாத்திரமல்லாது மாகாணசபைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் என்பனவற்றை வெற்றிகொள்வதே எமது இலக்காக உள்ளது.

அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண தேர்தல்  தொகுதிக்கான அமைப்பாளர் நியமிக்கப்பட்டதன் பின்பு இன்று அவரது அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலக திறப்புவிழாவோடு யாழ் மாவட்டத்திலே எமது கட்சி சாரந்த செயற்பாடுகள் தீவிரமாக வலுப்படுத்தப்படும் அதேவேளை, சகல மட்டங்களிலும் கட்சியின் செயற்பாடுகள் மேம்படுத்தப்படும்  இலங்கையில் மாற்றத்தைத் தரக்கூடிய தலைவராக சஜித் பிரேமதாசா காணப்படுகிறார்.

இவற்றுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ண அவர்களும் வட மாகாணத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களின் வழிகாட்டலில் வடமாகாணம் முழுவதிலும் உள்ளூராட்சித் தேர்தலை வெற்றிகொள்வதே எமது இலக்காகக் காணப்படுகின்றது.

எனவே எதிர்வரும  உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கு வாக்களித்து எம்மைப் பலப்படுத்துங்கள்.-என்றார்.

ஒரு வாக்கையாவது எங்களுக்கு வழங்குங்கள் - உமா சந்திரா யாழில் வேண்டுகோள் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக எதிர்கட்சி ஒன்று ஆளும் கட்சியைப்போன்று செயற்பட்டு வருவதாகஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது.இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் உமா சந்திரா பிரகாஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் இலங்கை மக்களின் மனங்களை வென்ற தலைவராக இருக்கின்றார். எதிர்க்கட்சி என்ற வகையிலே இலங்கை சுதந்திரமடைந்த பின் ஆளுங்கட்சியை விமர்சிப்பது மட்டுமே செயற்பாடாக இருந்த நிலையை மாற்றி எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளது என்பதை நிரூபித்த தலைவராக வரலாற்றிலே இடம்பிடித்துள்ளார்.அந்த வகையிலே கொரோனாத் தொற்றுக் காலகட்டத்தில் வைத்தியசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களாகட்டும் பாடசாலைக்குத் தேவையான உபகரணங்களாகட்டும், அண்மையிலே பாடசாலை மாணவர்களுக்கு பேரூந்துகளை வழங்கும் செயற்திட்டமாகட்டும் மக்கள் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்துவரும் தலைவராக விளங்குகின்றார். அதே நேரத்தில் இன மத மொழி கடந்து அனைத்து மக்களும் சமமாக  வாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கக்கூடிய தலைவராக சஜித் பிரேமதாசா நம்பிக்கையுடன் இருக்கின்றார் 2023 உள்ளூராட்சி தேர்தல் என்பது அனைவருக்கும் பிரதான தேர்தல் ஏனெனில்  இலஞ்சம் ஊழலற்ற வெளிப்படைத் தன்மையாக மக்கள் ஆணையை முன்னிறுத்தக்கூடிய முதலாவது தேர்தலாக இதைப் பார்க்கின்றோம். எங்களுடைய கட்சி ஆரம்பிக்கப்பட்டு வெறும் மூன்று வருடங்களாகக் காணப்பட்டாலும் பாரிய வளர்ச்சி கண்டுள்ளோம். எனவே  இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே பல புதிய முகங்கள்., இளைய தலைமுறையினர், பெண்கள், துறைசார் வல்லுனர்களோடு அரசியல் துறைகளிலே சிறப்பாகச் செயற்படுபவர்களையும் இணைத்துக்கொண்டு, எங்களுடைய அரசியல் பயணம் ஆரம்பமாகவுள்ளது.இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல் மாத்திரமல்லாது மாகாணசபைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் என்பனவற்றை வெற்றிகொள்வதே எமது இலக்காக உள்ளது.அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண தேர்தல்  தொகுதிக்கான அமைப்பாளர் நியமிக்கப்பட்டதன் பின்பு இன்று அவரது அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலக திறப்புவிழாவோடு யாழ் மாவட்டத்திலே எமது கட்சி சாரந்த செயற்பாடுகள் தீவிரமாக வலுப்படுத்தப்படும் அதேவேளை, சகல மட்டங்களிலும் கட்சியின் செயற்பாடுகள் மேம்படுத்தப்படும்  இலங்கையில் மாற்றத்தைத் தரக்கூடிய தலைவராக சஜித் பிரேமதாசா காணப்படுகிறார்.இவற்றுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ண அவர்களும் வட மாகாணத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களின் வழிகாட்டலில் வடமாகாணம் முழுவதிலும் உள்ளூராட்சித் தேர்தலை வெற்றிகொள்வதே எமது இலக்காகக் காணப்படுகின்றது.எனவே எதிர்வரும  உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கு வாக்களித்து எம்மைப் பலப்படுத்துங்கள்.-என்றார்.

Advertisement

Advertisement

Advertisement