• May 12 2024

இறக்குமதி முட்டையால் உருவாகப்போகும் நோய்கள்! - எச்சரிக்கும் விற்பனையாளர்கள்

Chithra / Jan 8th 2023, 12:57 pm
image

Advertisement

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்ற முட்டைகளால் மக்களுக்கு புது புது நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக முட்டை விற்பனையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தேவைக்கு அதிகமான முட்டைகள் இருப்பாதாகவும், ஆனால் அதனை தட்டுப்பாடு என்ற போர்வையில் விலையை அதிகரித்தது இந்த அரசாங்கமே என யாழ்ப்பாணத்திலுள்ள் முட்டை விற்பனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாக எமது சமூகம் மீடியா விற்பனையாளர்களிடம் கேள்விகளை எழுப்பியிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் போதே முட்டை விற்பனையாளர் ஒருவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

முட்டையினை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதியினை கொண்டு கோழி தீவனங்களை இறக்குமதி செய்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் விற்பனையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் முட்டை உற்பத்தியாளர்களின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


முட்டையின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் கோழிக்கான தீவனங்களின் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீவனங்களின் தட்டுப்பாடு காரணமாக பல கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தற்போது சில பண்ணைகள் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புது வருட கொண்டாட்டங்கள் முடிநடைந்தமையால் முட்டைகளளில் விலைகள் வீழ்ச்சியடைவதாகவும் மாறாக முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதனால் இதன் விலைகள் குறையவில்லை என்றும் விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் போது அவை பழுதாகாமல் இருப்பதற்காக மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும் எனவே இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டைகளால் மக்களுக்கு புது புது நோய்கள் உருவாகும் என்று விற்பனையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இறக்குமதி முட்டையால் உருவாகப்போகும் நோய்கள் - எச்சரிக்கும் விற்பனையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்ற முட்டைகளால் மக்களுக்கு புது புது நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக முட்டை விற்பனையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் தேவைக்கு அதிகமான முட்டைகள் இருப்பாதாகவும், ஆனால் அதனை தட்டுப்பாடு என்ற போர்வையில் விலையை அதிகரித்தது இந்த அரசாங்கமே என யாழ்ப்பாணத்திலுள்ள் முட்டை விற்பனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.தற்போது வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாக எமது சமூகம் மீடியா விற்பனையாளர்களிடம் கேள்விகளை எழுப்பியிருந்தது.இதற்கு பதில் அளிக்கும் போதே முட்டை விற்பனையாளர் ஒருவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.முட்டையினை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதியினை கொண்டு கோழி தீவனங்களை இறக்குமதி செய்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் விற்பனையாளர் குறிப்பிட்டுள்ளார்.இதனால் முட்டை உற்பத்தியாளர்களின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.முட்டையின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் கோழிக்கான தீவனங்களின் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த தீவனங்களின் தட்டுப்பாடு காரணமாக பல கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தற்போது சில பண்ணைகள் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.புது வருட கொண்டாட்டங்கள் முடிநடைந்தமையால் முட்டைகளளில் விலைகள் வீழ்ச்சியடைவதாகவும் மாறாக முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதனால் இதன் விலைகள் குறையவில்லை என்றும் விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் போது அவை பழுதாகாமல் இருப்பதற்காக மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும் எனவே இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டைகளால் மக்களுக்கு புது புது நோய்கள் உருவாகும் என்று விற்பனையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement