• Apr 08 2025

பாரவூர்தியிலிருந்து சரிந்து வீழ்ந்த கண்ணாடி - ஒருவர் பலி!

Tamil nila / Dec 19th 2024, 8:50 pm
image

பாரவூர்தியிலிருந்து கண்ணாடிகள் சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து கண்ணாடி ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்று ஹல்துமுல்ல பகுதியில் உள்ள கட்டுமான பொருள் விற்பனை நிலையங்களுக்குக் கண்ணாடிகளை இறக்கிக் கொண்டிருந்த போது, 35 வயதுடைய நபர் மீது கண்ணாடிகள் சரிந்து வீழ்ந்து படுகாயமடைந்தார்.

உடனடியாக இராணுவத்தினரின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, காவு வண்டியினூடாக ஹல்துமுல்ல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிகச் சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

விபத்து குறித்து ஹல்துமுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பாரவூர்தியிலிருந்து சரிந்து வீழ்ந்த கண்ணாடி - ஒருவர் பலி பாரவூர்தியிலிருந்து கண்ணாடிகள் சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து கண்ணாடி ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்று ஹல்துமுல்ல பகுதியில் உள்ள கட்டுமான பொருள் விற்பனை நிலையங்களுக்குக் கண்ணாடிகளை இறக்கிக் கொண்டிருந்த போது, 35 வயதுடைய நபர் மீது கண்ணாடிகள் சரிந்து வீழ்ந்து படுகாயமடைந்தார்.உடனடியாக இராணுவத்தினரின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, காவு வண்டியினூடாக ஹல்துமுல்ல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.பின்னர் மேலதிகச் சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.விபத்து குறித்து ஹல்துமுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement