• Nov 06 2024

ஆசனவாயில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகள்: கட்டுநாயக்கவில் சிக்கிய ஆறு இலங்கையர்கள்

Chithra / Jun 26th 2024, 2:44 pm
image

Advertisement

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளுடன் 06 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து  நேற்று (25) பிற்பகல் 01.20 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-1175 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கைதானவர்கள், கல்முனை, மூதூர், கொழும்பு-10, கல்கெடிஹேன் மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேர் எனவும்,

இவர்கள் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஸ்கேன் சோதனைக்கு அனுப்பியதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் போது, அவர்களில் 4 பேர் மலக்குடலில் தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்திருந்ததாகவும், 

மேலும் இருவர்  08 கிலோ 632 கிராம் எடையுள்ள தங்க ஜெல் உருண்டைகளை பயணப் பொதிகளில் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் திரு.இந்திக்க சில்வா உள்ளிட்ட சுங்க அதிகாரிகள் குழுவினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,  இன்று (26)  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


ஆசனவாயில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகள்: கட்டுநாயக்கவில் சிக்கிய ஆறு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளுடன் 06 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து  நேற்று (25) பிற்பகல் 01.20 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-1175 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.கைதானவர்கள், கல்முனை, மூதூர், கொழும்பு-10, கல்கெடிஹேன் மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேர் எனவும்,இவர்கள் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதுவிமான நிலைய சுங்க அதிகாரிகள் ஸ்கேன் சோதனைக்கு அனுப்பியதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன் போது, அவர்களில் 4 பேர் மலக்குடலில் தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்திருந்ததாகவும், மேலும் இருவர்  08 கிலோ 632 கிராம் எடையுள்ள தங்க ஜெல் உருண்டைகளை பயணப் பொதிகளில் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் திரு.இந்திக்க சில்வா உள்ளிட்ட சுங்க அதிகாரிகள் குழுவினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,  இன்று (26)  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement