• May 19 2024

கிளிநொச்சியில் தனியார் காணியொன்றில் தங்கம்...! ஆரம்பமான அகழ்வுப் பணி...!samugammedia

Sharmi / Oct 20th 2023, 2:29 pm
image

Advertisement

கிளிநொச்சியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமைய கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறி இன்றையதினம்(20)  அகழ்வுப் பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன்  நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த காணியில் 17 அடிவரை அகழ்வு பணிகள் நடைபெற்றது.

இவ் அகழ்வுப் பணிகளில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் துவராகினி ஜெகநாதன் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் கிராமசேவையாளர், பொலிசார்,சிறப்பு அதிரடிப் படையினர் முன்னிலையில்  இரண்டு பைக்கோ இயந்திரங்கள் இயந்திரங்கள் மூலம் அகழ்வுப் பணி நடைபெற்றது.

இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை.

இதனையடுத்து எதிர்வரும் 22ம் திகதி காலை 9.00 மணியளவில் மீண்டும் அகழ்வு பணி தொடரும் என  நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.


கிளிநொச்சியில் தனியார் காணியொன்றில் தங்கம். ஆரம்பமான அகழ்வுப் பணி.samugammedia கிளிநொச்சியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமைய கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறி இன்றையதினம்(20)  அகழ்வுப் பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன்  நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த காணியில் 17 அடிவரை அகழ்வு பணிகள் நடைபெற்றது.இவ் அகழ்வுப் பணிகளில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் துவராகினி ஜெகநாதன் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் கிராமசேவையாளர், பொலிசார்,சிறப்பு அதிரடிப் படையினர் முன்னிலையில்  இரண்டு பைக்கோ இயந்திரங்கள் இயந்திரங்கள் மூலம் அகழ்வுப் பணி நடைபெற்றது.இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை.இதனையடுத்து எதிர்வரும் 22ம் திகதி காலை 9.00 மணியளவில் மீண்டும் அகழ்வு பணி தொடரும் என  நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement