• Sep 21 2024

அடகு வைக்கப்படும் தங்க நகைகள் - 40 இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

Chithra / Dec 11th 2022, 6:14 am
image

Advertisement


நாடளாவிய ரீதியில் கடந்த 10 மாதங்களில் சுமார் 40 இலட்சம் பேர் சுமார் 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வர்த்தக வங்கிகள், 10 அடமான நிலையங்கள், 3 பிராந்திய செயலகங்கள் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்களைப் பயன்படுத்தி இவ்வாறு நகைகளை அடகு வைத்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாய பணிகளுக்காகவும், குழந்தைகளின் கல்வி உபகரணங்களை வாங்குவதற்காகவும், உணவு தேவையை நிறைவு செய்வதற்கும் தங்க நகைகளை இவ்வாறு அடகு வைத்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, இந்த வருடம் நவம்பர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு ஊழியர்கள் 384.4 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 3,313.9 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கமைய, கடந்த ஆண்டு நவம்பரில், வெளிநாட்டு தொழிலாளர்கள் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதுடன்,இந்த தொகை 42 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

அடகு வைக்கப்படும் தங்க நகைகள் - 40 இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் நாடளாவிய ரீதியில் கடந்த 10 மாதங்களில் சுமார் 40 இலட்சம் பேர் சுமார் 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.இதற்கமைய, வர்த்தக வங்கிகள், 10 அடமான நிலையங்கள், 3 பிராந்திய செயலகங்கள் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்களைப் பயன்படுத்தி இவ்வாறு நகைகளை அடகு வைத்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.இலங்கையில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாய பணிகளுக்காகவும், குழந்தைகளின் கல்வி உபகரணங்களை வாங்குவதற்காகவும், உணவு தேவையை நிறைவு செய்வதற்கும் தங்க நகைகளை இவ்வாறு அடகு வைத்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இந்த வருடம் நவம்பர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு ஊழியர்கள் 384.4 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 3,313.9 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.இதற்கமைய, கடந்த ஆண்டு நவம்பரில், வெளிநாட்டு தொழிலாளர்கள் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதுடன்,இந்த தொகை 42 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement