• May 01 2024

ஆசிய நாடுகளின் தூதுவர்கள் யாழிற்கு திடீர் விஜயம்!

Sharmi / Dec 11th 2022, 12:07 am
image

Advertisement

ஆசிய நாடுகளின் தூதுவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன்  பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்தனர்.

அங்கு நெசவுத் பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டனர்.

இது தொடர்பில் மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரத்தினம் கருத்து தெரிவித்தார்.

தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து ஆசிய குரூப் என்ற பெயரில் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற் திணைக்களத்தின் நெசவுசாலைக்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டனர்.

இது தொடர்பில் பெண்களை வலுவூட்டுவது தொடர்பில் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.  உண்மையில் மனித வலுவினை பயன்படுத்தி பெண்களால் செய்யப்படுகின்ற ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் எங்க வெற்றி அவர்கள் பார்வையிட்டு தமது பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர். அத்துடன் உற்பத்திகளை அவர்கள் விரும்பிக் கொள்வனவு செய்திருந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற பெண்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியை , வாழ்வாதார திட்டத்துக்காக பயன்படுத்துகின்ற செயல் திட்டமாக இந்த நெசவு பயிற்சி நிலையம் காணப்படுகிறது.

ஆசிய நாடுகளின் தூதுவர்கள் யாழிற்கு திடீர் விஜயம் ஆசிய நாடுகளின் தூதுவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.இதன்போது சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன்  பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்தனர்.அங்கு நெசவுத் பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டனர்.இது தொடர்பில் மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரத்தினம் கருத்து தெரிவித்தார்.தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து ஆசிய குரூப் என்ற பெயரில் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற் திணைக்களத்தின் நெசவுசாலைக்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டனர்.இது தொடர்பில் பெண்களை வலுவூட்டுவது தொடர்பில் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.  உண்மையில் மனித வலுவினை பயன்படுத்தி பெண்களால் செய்யப்படுகின்ற ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் எங்க வெற்றி அவர்கள் பார்வையிட்டு தமது பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர். அத்துடன் உற்பத்திகளை அவர்கள் விரும்பிக் கொள்வனவு செய்திருந்தனர்.ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற பெண்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியை , வாழ்வாதார திட்டத்துக்காக பயன்படுத்துகின்ற செயல் திட்டமாக இந்த நெசவு பயிற்சி நிலையம் காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement