நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை – பெரகல பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊவா மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று அதிகாலை பல கற்பாறைகள் கொழும்பு – பதுளை பிரதான வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரங்கஹவெல தொடக்கம் ஹப்புத்தளை வரையான கொழும்பு – பதுளை வீதிப் பகுதியில் உயரமான மலைச் சரிவில் இருந்து கற்பாறைகள் விழும் அபாயம் உள்ளதாகவும் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதால் கொழும்பு – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்தும் போது அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸார் வாகன சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாறைகள் சரிந்து விழும் அபாயம். வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை – பெரகல பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஊவா மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று அதிகாலை பல கற்பாறைகள் கொழும்பு – பதுளை பிரதான வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மரங்கஹவெல தொடக்கம் ஹப்புத்தளை வரையான கொழும்பு – பதுளை வீதிப் பகுதியில் உயரமான மலைச் சரிவில் இருந்து கற்பாறைகள் விழும் அபாயம் உள்ளதாகவும் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மேலும், அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதால் கொழும்பு – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்தும் போது அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸார் வாகன சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.