• May 02 2024

இலங்கையில் ஒரே நாளில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை! வெளியான புதிய அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 10th 2023, 2:58 pm
image

Advertisement

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இது தொடர்பில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், 


நேற்றைய தினத்தை விடவும், இன்றைய தினம், 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை, 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும்.

நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்று ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.


அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்றைய தினம் ஒரு இலட்சத்து 42 ஆயிரம் ரூபாவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரு வாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி தங்கப்பவுணொன்றின் விலை ஒரு வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.


இந்த விடயத்தை விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நகைக்கடைகளில் நெருக்கடி நிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு செட்டியார்த்தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 155,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது இன்றைய தினம் 143,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையில் ஒரே நாளில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை வெளியான புதிய அறிவிப்பு SamugamMedia இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், நேற்றைய தினத்தை விடவும், இன்றைய தினம், 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை, 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும்.நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்று ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்றைய தினம் ஒரு இலட்சத்து 42 ஆயிரம் ரூபாவாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரு வாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.அதன்படி தங்கப்பவுணொன்றின் விலை ஒரு வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.இந்த விடயத்தை விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நகைக்கடைகளில் நெருக்கடி நிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை கொழும்பு செட்டியார்த்தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 155,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது இன்றைய தினம் 143,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement