• Sep 17 2024

அலாஸ்கா கடற்கரை பகுதியில் இனங்காணப்பட்டுள்ள தங்க முட்டை! samugammedia

Tamil nila / Sep 10th 2023, 9:21 pm
image

Advertisement

அலாஸ்கா கடற்கரை அருகே பசிபிக் பெருங்கடலில் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வுக் குழுவொன்று  தங்க முட்டை போன்ற பொருளைக் கண்டுபிடித்துள்ளது.

இறந்த எரிமலை தொடர்பாக அலாஸ்காவிற்கு அருகில் உள்ள கடலில் “Seascape Alaska 5 Expedition” என்ற ஆய்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி குறித்த மர்மப் பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தங்க முட்டை போன்ற பொருள் சுமார் 10cm அல்லது 4 அங்குல விட்டம் கொண்டதாகவும் அதன் கீழ் ஒரு சிறிய துளை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை முதலில் பார்த்தபோது, ​​அது இறந்த பவளப்பாறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதியுள்ளனர்.

“கற்பனை விசித்திரக் கதைகளில்” உள்ள இயற்கைக்கு அப்பாற்பட்ட பொருட்களின் குணாதிசயங்களும் இந்த பொருளுக்கு இருப்பதாக ஆய்வுக் குழு கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை கண்டறியப்பட்ட உயிரியல் உண்மைகளின் அடிப்படையில் முட்டை வடிவிலான தங்கப் பொருள் அழிந்துபோன இனத்தைச் சேர்ந்ததா அல்லது அடையாளம் காணப்படாத புதிய இனத்தைச் சேர்ந்ததா என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அலாஸ்கா கடற்கரை பகுதியில் இனங்காணப்பட்டுள்ள தங்க முட்டை samugammedia அலாஸ்கா கடற்கரை அருகே பசிபிக் பெருங்கடலில் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வுக் குழுவொன்று  தங்க முட்டை போன்ற பொருளைக் கண்டுபிடித்துள்ளது.இறந்த எரிமலை தொடர்பாக அலாஸ்காவிற்கு அருகில் உள்ள கடலில் “Seascape Alaska 5 Expedition” என்ற ஆய்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி குறித்த மர்மப் பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தங்க முட்டை போன்ற பொருள் சுமார் 10cm அல்லது 4 அங்குல விட்டம் கொண்டதாகவும் அதன் கீழ் ஒரு சிறிய துளை இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதை முதலில் பார்த்தபோது, ​​அது இறந்த பவளப்பாறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதியுள்ளனர்.“கற்பனை விசித்திரக் கதைகளில்” உள்ள இயற்கைக்கு அப்பாற்பட்ட பொருட்களின் குணாதிசயங்களும் இந்த பொருளுக்கு இருப்பதாக ஆய்வுக் குழு கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுவரை கண்டறியப்பட்ட உயிரியல் உண்மைகளின் அடிப்படையில் முட்டை வடிவிலான தங்கப் பொருள் அழிந்துபோன இனத்தைச் சேர்ந்ததா அல்லது அடையாளம் காணப்படாத புதிய இனத்தைச் சேர்ந்ததா என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement