• Dec 14 2024

உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன் விழா மற்றும் 17வது பன்னாட்டு மாநாடு!

Tamil nila / Jun 15th 2024, 10:59 pm
image

உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன் விழா மற்றும் 17வது பன்னாட்டு மாநாடு நேற்றும் (14) ,இன்றும் (15) இரண்டு  அமர்வுகளாக யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது. 

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் உலகத்தமிழ் பண்பாட்டு மையம் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில்,  4 ஆவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு நினைவாலயத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. குறித்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டார். 

முதலாம் நாள் அமர்வானது  நேற்றைய தினம் யாழிலுள்ள திவ்ய மஹால் தனியார் விடுதியில் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணி வரை இடம்பெற்றது. 

இதில் விருந்தினர்களின் உரையை தொடர்ந்து, மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது.  தொடர்ந்து 2024 ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கி வைப்பட்டன.

இரண்டாம்  நாள் அமர்வானது  இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரியில்  காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3 மணிவரை இடம்பெற்றது. 

மாநாட்டின் தீர்மானங்கள், நூல் வெளியீடு மற்றும் கலைநிகழ்வுகளுடன் மாநாடு நிறைவடைந்தது. 

இந்த மாநாட்டில் மதத்தலைவர்கள், வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த  பேராசிரியர்கள், வடக்கு கிழக்கிலுள்ள புத்திஜீவிகள், உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அங்கத்தவர்கள், தமிழ் அரசியல்  பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன் விழா மற்றும் 17வது பன்னாட்டு மாநாடு உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன் விழா மற்றும் 17வது பன்னாட்டு மாநாடு நேற்றும் (14) ,இன்றும் (15) இரண்டு  அமர்வுகளாக யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது. உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் உலகத்தமிழ் பண்பாட்டு மையம் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில்,  4 ஆவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு நினைவாலயத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. குறித்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டார். முதலாம் நாள் அமர்வானது  நேற்றைய தினம் யாழிலுள்ள திவ்ய மஹால் தனியார் விடுதியில் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணி வரை இடம்பெற்றது. இதில் விருந்தினர்களின் உரையை தொடர்ந்து, மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது.  தொடர்ந்து 2024 ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கி வைப்பட்டன.இரண்டாம்  நாள் அமர்வானது  இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரியில்  காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3 மணிவரை இடம்பெற்றது. மாநாட்டின் தீர்மானங்கள், நூல் வெளியீடு மற்றும் கலைநிகழ்வுகளுடன் மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் மதத்தலைவர்கள், வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த  பேராசிரியர்கள், வடக்கு கிழக்கிலுள்ள புத்திஜீவிகள், உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அங்கத்தவர்கள், தமிழ் அரசியல்  பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement