• May 05 2024

பட்ஜெட்டுக்கு பச்சைக்கொடி காட்டிய எம்.பிக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Sharmi / Dec 8th 2022, 8:34 pm
image

Advertisement

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அமைச்சரவை மாற்றத்தின்போது  10 அமைச்சரவை அந்தஸ்துள்ள  அமைச்சர்கள் மற்றும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக வஜிர அபேவர்தன, ஜீவன் தொண்டமான், துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் நியமிக்கப்பட உள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் தற்போது 20 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 38 இராஜாங்க அமைச்சர்களும் பதவி வகிக்கின்றனர்.

புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்ட பின்னர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டுக்கு பச்சைக்கொடி காட்டிய எம்.பிக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.குறித்த அமைச்சரவை மாற்றத்தின்போது  10 அமைச்சரவை அந்தஸ்துள்ள  அமைச்சர்கள் மற்றும் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக வஜிர அபேவர்தன, ஜீவன் தொண்டமான், துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் நியமிக்கப்பட உள்ளனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தில் தற்போது 20 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 38 இராஜாங்க அமைச்சர்களும் பதவி வகிக்கின்றனர். புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்ட பின்னர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement