• May 14 2024

நீரிழிவு நோய்க்கு உடனடித் தீர்வளிக்கும் சிவப்பு அரிசி ஆப்பம்: இப்பிடி செய்து பாருங்க!

Sharmi / Dec 8th 2022, 8:23 pm
image

Advertisement

இன்றைய நவீன காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை மட்டுமின்றி அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் மாறியுள்ளது. இதனால் பலரும் உடல் உபாதைகளை சந்திப்பதுடன், இதய பிரச்சினை, நீரிழிவு பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் மிகுந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் அவசியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஊட்ட சத்து நிறைந்த தானியங்களில் ஒன்றான சிவப்பு அரிசி காணப்படுகின்றது. சிவப்பரிசியில் குறைந்த அளவு கார்போஹைரேட் இருப்பதால்,  சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.

மேலும் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு என்பதால் இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவாகும்.அது தவிர உடல் எடை குறைக்க விருப்புபவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பதுடன்,  புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றது.

சிவப்பு அரிசி ஆப்பம்

சிவப்பு அரிசி - 1/2 கிலோ

தேங்காய் துருவல் - 2 கப்

உளுந்து -1 ஸ்பூன் 

வெந்தயம் - 1ஃ2 ஸ்பூன் 

வெல்லம் - 50 கிராம் 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

பாத்திரம் ஒன்றில் சிவப்பு அரிசியினை போட்டு அதனை தண்ணீரில் நன்கு அலசிய பின்பு 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். உளுந்தும் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் மற்றும் வெல்லத்தினை துருவிக்கொள்ள வேண்டும். பின்பு 4 நேரம் அரிசி உளுந்து  ஊறிய பின்பு அதனை கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது தேங்காய், வெல்லம், உளுந்து, சிறிது வெந்தயம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து சுமார் 7 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் ஆப்ப கடாயை வைத்து மாவை ஊற்றி ஆப்பம் சுட்டு எடுத்தால், சுவையான சிவப்பரிசி ஆப்பம் தயார்.

நீரிழிவு நோய்க்கு உடனடித் தீர்வளிக்கும் சிவப்பு அரிசி ஆப்பம்: இப்பிடி செய்து பாருங்க இன்றைய நவீன காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை மட்டுமின்றி அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் மாறியுள்ளது. இதனால் பலரும் உடல் உபாதைகளை சந்திப்பதுடன், இதய பிரச்சினை, நீரிழிவு பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் மிகுந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் அவசியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஊட்ட சத்து நிறைந்த தானியங்களில் ஒன்றான சிவப்பு அரிசி காணப்படுகின்றது. சிவப்பரிசியில் குறைந்த அளவு கார்போஹைரேட் இருப்பதால்,  சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.மேலும் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு என்பதால் இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவாகும்.அது தவிர உடல் எடை குறைக்க விருப்புபவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பதுடன்,  புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றது.சிவப்பு அரிசி ஆப்பம்சிவப்பு அரிசி - 1/2 கிலோதேங்காய் துருவல் - 2 கப்உளுந்து -1 ஸ்பூன் வெந்தயம் - 1ஃ2 ஸ்பூன் வெல்லம் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை:பாத்திரம் ஒன்றில் சிவப்பு அரிசியினை போட்டு அதனை தண்ணீரில் நன்கு அலசிய பின்பு 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். உளுந்தும் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.தேங்காய் மற்றும் வெல்லத்தினை துருவிக்கொள்ள வேண்டும். பின்பு 4 நேரம் அரிசி உளுந்து  ஊறிய பின்பு அதனை கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது தேங்காய், வெல்லம், உளுந்து, சிறிது வெந்தயம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த மாவை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து சுமார் 7 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் ஆப்ப கடாயை வைத்து மாவை ஊற்றி ஆப்பம் சுட்டு எடுத்தால், சுவையான சிவப்பரிசி ஆப்பம் தயார்.

Advertisement

Advertisement

Advertisement