• May 18 2024

உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்த எலான் மஸ்க்!

Sharmi / Dec 8th 2022, 8:11 pm
image

Advertisement

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். 

இவரை விட, லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்டு அர்னால்ட் என்பவர் அதிக சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்து 30 ஆயிரத்து 866 கோடி ஆகும்.

இது ஏறக்குறைய எலான் மஸ்க்கை விட ரூ.3 ஆயிரத்து 295 கோடி அதிகம். சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவதற்காக ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 530 கோடியை அதில் முடக்கினார். 

அதனால், குறித்த  சரிவு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகின்றது. இதனால், மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ.16.47 லட்சம் கோடிக்கு கீழே சென்றுள்ளது.

எனினும், மஸ்க் தற்போது டெஸ்லா, டுவிட்டர், ஸ்பேஸ்எக்ஸ், நியூராலிங் மற்றும் தி போரிங் நிறுவனம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாகவும் மற்றும் உரிமையாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்த எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். இவரை விட, லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்டு அர்னால்ட் என்பவர் அதிக சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்து 30 ஆயிரத்து 866 கோடி ஆகும். இது ஏறக்குறைய எலான் மஸ்க்கை விட ரூ.3 ஆயிரத்து 295 கோடி அதிகம். சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவதற்காக ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 530 கோடியை அதில் முடக்கினார். அதனால், குறித்த  சரிவு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகின்றது. இதனால், மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ.16.47 லட்சம் கோடிக்கு கீழே சென்றுள்ளது. எனினும், மஸ்க் தற்போது டெஸ்லா, டுவிட்டர், ஸ்பேஸ்எக்ஸ், நியூராலிங் மற்றும் தி போரிங் நிறுவனம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாகவும் மற்றும் உரிமையாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement