• May 02 2024

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!samugammedia

Sharmi / Mar 31st 2023, 1:43 pm
image

Advertisement

டீசல் விலை குறைக்கப்பட்டாலும், தங்களால் போக்குவரத்து கட்டணத்தை 5 வீதத்தால் மாத்திரமே குறைக்க முடியும் என அம்பலாங்கொடை பாடசாலை வாகன போக்குவரத்து சங்கம் இன்று (31) அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

மேல்மாகாணத்தில் பாடசாலை வாகன போக்குவரத்துச் சங்கங்கள் 10 வீதம் கட்டணத்தைக் குறைத்தாலும், தங்களால் அதனைச் செய்ய முடியாது என அம்பலாங்கொடை குறித்த சங்கத்தின் தலைவர் மஞ்சுள பிரதீப் தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறை மாதங்களில் தமது சங்கம் போக்குவரத்துக் கட்டணத்தை அறவிடுவதில்லை, ஆனால் மேல்மாகாணத்தில் விடுமுறை நாட்களில் கட்டணம் அறவிடப்படுவதால் 10 வீதத்தால் கட்டணத்தைக் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

டீசல் விலை மிகக் குறைந்த அளவே குறைந்துள்ளதாலும், தங்களது தொழிலுக்குத் தேவையான ஏனைய பொருட்களின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாலும் மே மாதம் முதல் போக்குவரத்துக் கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திsamugammedia டீசல் விலை குறைக்கப்பட்டாலும், தங்களால் போக்குவரத்து கட்டணத்தை 5 வீதத்தால் மாத்திரமே குறைக்க முடியும் என அம்பலாங்கொடை பாடசாலை வாகன போக்குவரத்து சங்கம் இன்று (31) அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. மேல்மாகாணத்தில் பாடசாலை வாகன போக்குவரத்துச் சங்கங்கள் 10 வீதம் கட்டணத்தைக் குறைத்தாலும், தங்களால் அதனைச் செய்ய முடியாது என அம்பலாங்கொடை குறித்த சங்கத்தின் தலைவர் மஞ்சுள பிரதீப் தெரிவித்தார். பாடசாலை விடுமுறை மாதங்களில் தமது சங்கம் போக்குவரத்துக் கட்டணத்தை அறவிடுவதில்லை, ஆனால் மேல்மாகாணத்தில் விடுமுறை நாட்களில் கட்டணம் அறவிடப்படுவதால் 10 வீதத்தால் கட்டணத்தைக் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். டீசல் விலை மிகக் குறைந்த அளவே குறைந்துள்ளதாலும், தங்களது தொழிலுக்குத் தேவையான ஏனைய பொருட்களின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாலும் மே மாதம் முதல் போக்குவரத்துக் கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement