• May 13 2024

வாயை மூடு என திட்டிய கோட்டா - மகிந்தவும் தவறான முடிவு எடுத்தார் - ராஜபக்சாக்களுக்கு எதிராக திரும்பும் மொட்டு.! samugammedia

Chithra / Jun 26th 2023, 11:53 am
image

Advertisement

விவசாயிகளுக்கான இராசாயண உரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உண்மை நிலவரத்தை விளக்கிய போது, இதற்கு ஆதரவளிக்க முடியாவிட்டால் வாயை மூடுமாறு கோட்டாபய கூறியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஹலவத்தையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மீனவர்கள் தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டதால் மீனவர்கள் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக சனத் நிசாந்த குறிப்பிட்டுள்ளார்.

நான் கிராமத்தைச் சேர்ந்த அரசியல்வாதி.  கிராம மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் நன்கு அறிந்துள்ளேன்.

உர விவகாரம் தொடர்பில் கோட்டாவிடம் உண்மையைக் கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை எனது வாயை மூடுமாறு கூறினார்.

இறுதியில் கோட்டாபய தனது பதவியை இழந்தார். அண்மைக்காலமாக நாடு சில பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தது.

அதற்கு அரச இயந்திரத்தில் ஏற்பட்ட சில குறைபாடுகளே காரணம்.  ஆனால் தற்பொது இல்லை. 


தற்பொது அரச இயந்திரம் நன்றாக உள்ளது.  நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை உள்ளது. நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. 

கிராமத்தில் உள்ள குடும்பங்கள் படுகின்ற, துன்பம் எனக்கு நன்றாகவே தெரியும். 

ஆனால் இந்த பிரச்சனைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்று நான் தெளிவாக கூறுகிறேன். 

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மீனவர்கள் தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டதால் மீனவர்கள் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக ஞாபகம். 

அங்கு ஒரு மீனவர் சகோதரர் காணாமல் போனார்.  அன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சரியான தகவல் வழங்கப்பட்டிருந்தால் அந்த உயிர் போனிருக்காது. 

பொதுஜன பெரமுன காலம் முடிவடைந்து விட்டது என பலரும் கூறினர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. 

பொதுஜன பெரமுன இன்று இருப்பதை விடவும் பலமாக உள்ளது.

வாயை மூடு என திட்டிய கோட்டா - மகிந்தவும் தவறான முடிவு எடுத்தார் - ராஜபக்சாக்களுக்கு எதிராக திரும்பும் மொட்டு. samugammedia விவசாயிகளுக்கான இராசாயண உரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உண்மை நிலவரத்தை விளக்கிய போது, இதற்கு ஆதரவளிக்க முடியாவிட்டால் வாயை மூடுமாறு கோட்டாபய கூறியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் ஹலவத்தையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.அத்துடன் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மீனவர்கள் தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டதால் மீனவர்கள் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக சனத் நிசாந்த குறிப்பிட்டுள்ளார்.நான் கிராமத்தைச் சேர்ந்த அரசியல்வாதி.  கிராம மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் நன்கு அறிந்துள்ளேன்.உர விவகாரம் தொடர்பில் கோட்டாவிடம் உண்மையைக் கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை எனது வாயை மூடுமாறு கூறினார்.இறுதியில் கோட்டாபய தனது பதவியை இழந்தார். அண்மைக்காலமாக நாடு சில பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தது.அதற்கு அரச இயந்திரத்தில் ஏற்பட்ட சில குறைபாடுகளே காரணம்.  ஆனால் தற்பொது இல்லை. தற்பொது அரச இயந்திரம் நன்றாக உள்ளது.  நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை உள்ளது. நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. கிராமத்தில் உள்ள குடும்பங்கள் படுகின்ற, துன்பம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த பிரச்சனைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்று நான் தெளிவாக கூறுகிறேன். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மீனவர்கள் தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டதால் மீனவர்கள் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக ஞாபகம். அங்கு ஒரு மீனவர் சகோதரர் காணாமல் போனார்.  அன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சரியான தகவல் வழங்கப்பட்டிருந்தால் அந்த உயிர் போனிருக்காது. பொதுஜன பெரமுன காலம் முடிவடைந்து விட்டது என பலரும் கூறினர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. பொதுஜன பெரமுன இன்று இருப்பதை விடவும் பலமாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement