முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார பதவி விலகியுள்ளார். சுகீஸ்வர பண்டார தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (20.02.2024) கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கடிதத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக சுகீஸ்வர பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாய் நாட்டிற்கும், தாய் நாட்டில் வாழும் சகோதர மக்களுக்கும் சேவை செய்வதே தனது ஒரே நோக்கம் எனவும், அதற்காக புதிய நாட்டை உருவாக்குவதற்கான புதிய அரசியல் வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டை பெருமையுடன் மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய அணியுடன் இணைந்து செயற்பட தான் தயங்கப்போவதில்லை எனவும் அவர் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதவி விலகினார் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர்.samugammedia முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார பதவி விலகியுள்ளார். சுகீஸ்வர பண்டார தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (20.02.2024) கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த கடிதத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக சுகீஸ்வர பண்டார குறிப்பிட்டுள்ளார்.மேலும், தாய் நாட்டிற்கும், தாய் நாட்டில் வாழும் சகோதர மக்களுக்கும் சேவை செய்வதே தனது ஒரே நோக்கம் எனவும், அதற்காக புதிய நாட்டை உருவாக்குவதற்கான புதிய அரசியல் வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தாய் நாட்டை பெருமையுடன் மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய அணியுடன் இணைந்து செயற்பட தான் தயங்கப்போவதில்லை எனவும் அவர் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.