• Feb 14 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் அரசு கலந்துரையாடல்

Chithra / Feb 13th 2025, 12:14 pm
image


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலும் தேர்தலுக்கான ஏனைய நடவடிக்கைகள் தொடர்பிலும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை பெறத் திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திகதியை தற்போது உறுதியாகக் கூற முடியாது. 

இருந்தபோதும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்மானம் தற்போது சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டுள்ளோம்.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது. 

பாராளுமன்றத்தில் கலந்துரையாடி கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொண்டதன் பின்னர் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கக் கூடியதாக இருக்குமென்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் அரசு கலந்துரையாடல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலும் தேர்தலுக்கான ஏனைய நடவடிக்கைகள் தொடர்பிலும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை பெறத் திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திகதியை தற்போது உறுதியாகக் கூற முடியாது. இருந்தபோதும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்மானம் தற்போது சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டுள்ளோம்.அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் கலந்துரையாடி கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொண்டதன் பின்னர் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கக் கூடியதாக இருக்குமென்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement