• Nov 24 2024

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது - பந்துல குணவர்தன தெரிவிப்பு

Anaath / Aug 21st 2024, 2:34 pm
image

அரச ஊழியர்களின் சம்பளத்தை  அதிகரிக்க முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் நடத்திய உரையின் போதே அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

அரச ஊழியர்களுக்கு நாங்கள் கடந்த வருடத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் இந்த வருடத்தில் எங்களால் சகல ஊழியர்களுக்கும் கொடுக்க கூடியது 10000 ரூபா மாத்திரமே. சம்பளம் அதிகரிக்க முடியாது.  அப்படி ஒரு பணம் இல்லை.  பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகின்ற பணம் இருந்தால் தருவோம். வைத்தியர்கள் இந்த நிலை கொடுப்பனவை பெறுவது கடினம் என்று இடைக்கால கொடுப்பனவை கூறியிருந்தார்கள். அதற்கு பிறகு வைத்தியர்கள் இந்த நிலைமைக்கு முகம் கொடுப்பது கடினம் என்று கூறியிருந்தார்கள். அதற்கு பிறகு பல்கலைக்கழக பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் இந்த நிலைக்கு முகம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார்கள். அதனை தொடர்ந்து பிரதி செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும். 

இது எல்லை இல்லாமல் சென்றதால் ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெரிவித்தார் இந்த சகல சம்பள முரண்பாடுகளையும் அகற்றி சம்பளங்களை ஒப்பீடு செய்து சம்பள மறுசீரமைப்பு செய்வதற்கான யோசனைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது - பந்துல குணவர்தன தெரிவிப்பு அரச ஊழியர்களின் சம்பளத்தை  அதிகரிக்க முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றில் நடத்திய உரையின் போதே அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  அரச ஊழியர்களுக்கு நாங்கள் கடந்த வருடத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் இந்த வருடத்தில் எங்களால் சகல ஊழியர்களுக்கும் கொடுக்க கூடியது 10000 ரூபா மாத்திரமே. சம்பளம் அதிகரிக்க முடியாது.  அப்படி ஒரு பணம் இல்லை.  பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகின்ற பணம் இருந்தால் தருவோம். வைத்தியர்கள் இந்த நிலை கொடுப்பனவை பெறுவது கடினம் என்று இடைக்கால கொடுப்பனவை கூறியிருந்தார்கள். அதற்கு பிறகு வைத்தியர்கள் இந்த நிலைமைக்கு முகம் கொடுப்பது கடினம் என்று கூறியிருந்தார்கள். அதற்கு பிறகு பல்கலைக்கழக பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் இந்த நிலைக்கு முகம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார்கள். அதனை தொடர்ந்து பிரதி செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும். இது எல்லை இல்லாமல் சென்றதால் ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெரிவித்தார் இந்த சகல சம்பள முரண்பாடுகளையும் அகற்றி சம்பளங்களை ஒப்பீடு செய்து சம்பள மறுசீரமைப்பு செய்வதற்கான யோசனைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement