• Jan 10 2025

பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தைக் கட்டடத் தொகுதி ஆளுநரால் திறந்துவைப்பு

Chithra / Jan 10th 2025, 1:34 pm
image

 

பருத்தித்துறை நகர சபையின் புதியசந்தைக் கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தேசிய கொடி ஏற்றப்பட்டு சந்தை கட்டட தொகுதியின் புதிய கட்டிடம் ஆளுநர் நாடா விட்டு திறந்து வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து திரை நீக்கம் செய்யப்பட்டு கட்டடம் பார்வையிடப்பட்டது.

தை திருநாளில் முதற்கிழமையில் வியாபாரிகளுக்கு குறித்த மரக்கறி சந்தை வியாபாரிகளுக்காக கையளிக்கப்படும்.

இதன்போது உரையாற்றிய ஆளுநர்,

மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு நிர்வாகம் தற்போது clean srilanka எனும் தொனிக்  பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அரச சேவைகளைப் பெறுகின்ற போது தெரிந்த ஒருவரைக் கூட்டிச் செல்ல வேண்டிய சூழல் கடந்த காலங்களில் காணப்பட்டது.

2025 ஆம் ஆண்டு மக்கள் தமது சேவைகளை தங்கு தடையின்றி பெற்றுக்கொள்ளும் வகையிலன ஆண்டாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் எல்.இளங்கோவன், பருத்தித்துறை பிரதேச செயலர், நகர சபையின் தலைவர், செயலாளர், வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தைக் கட்டடத் தொகுதி ஆளுநரால் திறந்துவைப்பு  பருத்தித்துறை நகர சபையின் புதியசந்தைக் கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.தேசிய கொடி ஏற்றப்பட்டு சந்தை கட்டட தொகுதியின் புதிய கட்டிடம் ஆளுநர் நாடா விட்டு திறந்து வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து திரை நீக்கம் செய்யப்பட்டு கட்டடம் பார்வையிடப்பட்டது.தை திருநாளில் முதற்கிழமையில் வியாபாரிகளுக்கு குறித்த மரக்கறி சந்தை வியாபாரிகளுக்காக கையளிக்கப்படும்.இதன்போது உரையாற்றிய ஆளுநர்,மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு நிர்வாகம் தற்போது clean srilanka எனும் தொனிக்  பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அரச சேவைகளைப் பெறுகின்ற போது தெரிந்த ஒருவரைக் கூட்டிச் செல்ல வேண்டிய சூழல் கடந்த காலங்களில் காணப்பட்டது.2025 ஆம் ஆண்டு மக்கள் தமது சேவைகளை தங்கு தடையின்றி பெற்றுக்கொள்ளும் வகையிலன ஆண்டாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.நிகழ்வில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் எல்.இளங்கோவன், பருத்தித்துறை பிரதேச செயலர், நகர சபையின் தலைவர், செயலாளர், வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement