• Nov 24 2024

ராஜபக்சக்களை பாதுகாக்கவே முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர அரசு தீர்மானம்! மரிக்கார் சுட்டிக்காட்டு

Chithra / Jul 26th 2024, 10:18 am
image

 

கோவிட் தொற்றில்  மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எரித்த குற்றச்செயலில் இருந்து ராஜபக்சவினரை பாதுகாத்து அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தவே தற்போது அமைச்சரவை முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோர தீர்மானித்திருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எந்தவித விஞ்ஞான ரீதியிலான தீர்மானமும் இல்லாமல் எரிப்பதற்கு ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் மிகவும் வேதனை அடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் அதன் வேதனையை உணர்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் வெறுமனே முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரி இதில் இருந்து தப்பிக்கொள்ள முடியும் என நினைப்பது அரசாங்கத்தின் முட்டாள்தனமான விடயம்.

ராஜபக்சக்களை இந்த குற்றத்தில் இருந்து பாதுகாத்து அதிகாரிகள் மீது பழி சுமத்தவே அரசாங்கம் திடீரென இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கிறது.

அப்படியானால் சடலங்களை எரிப்பதற்கு அதிகாரிகள் விஞ்ஞான ரீதியில் அல்லாமல் ஆலாேசனை வழங்கி இருந்தால், அந்த தீர்மானத்தை எடுத்தவர்கள் யார். அப்போது அமைச்சரவையில் இருந்தவர்கள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார்கள்?.

அதனால் இடம்பெற்ற சம்பவத்துக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரி, தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் வேதனையை இந்தளவு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதற்கான நட்டஈடு அரசாங்கத்துக்கு கிடைக்கும்.

எனவே சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்தில் இந்த தவறுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்களை பாதுகாக்கவே முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர அரசு தீர்மானம் மரிக்கார் சுட்டிக்காட்டு  கோவிட் தொற்றில்  மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எரித்த குற்றச்செயலில் இருந்து ராஜபக்சவினரை பாதுகாத்து அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தவே தற்போது அமைச்சரவை முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோர தீர்மானித்திருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கோவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எந்தவித விஞ்ஞான ரீதியிலான தீர்மானமும் இல்லாமல் எரிப்பதற்கு ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.அந்த அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் மிகவும் வேதனை அடைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் அதன் வேதனையை உணர்ந்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் அரசாங்கம் வெறுமனே முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரி இதில் இருந்து தப்பிக்கொள்ள முடியும் என நினைப்பது அரசாங்கத்தின் முட்டாள்தனமான விடயம்.ராஜபக்சக்களை இந்த குற்றத்தில் இருந்து பாதுகாத்து அதிகாரிகள் மீது பழி சுமத்தவே அரசாங்கம் திடீரென இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கிறது.அப்படியானால் சடலங்களை எரிப்பதற்கு அதிகாரிகள் விஞ்ஞான ரீதியில் அல்லாமல் ஆலாேசனை வழங்கி இருந்தால், அந்த தீர்மானத்தை எடுத்தவர்கள் யார். அப்போது அமைச்சரவையில் இருந்தவர்கள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார்கள்.அதனால் இடம்பெற்ற சம்பவத்துக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரி, தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது.பாதிக்கப்பட்ட முஸ்லிம் வேதனையை இந்தளவு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதற்கான நட்டஈடு அரசாங்கத்துக்கு கிடைக்கும்.எனவே சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்தில் இந்த தவறுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement