• Nov 25 2024

48 இலட்சமாக அதிகரித்துள்ள குடும்பம் ஒன்றிற்காக அரசாங்கம் பெற்ற கடன் - பேராசிரியர் வெளியிட்ட தகவல்

Chithra / Nov 10th 2024, 11:07 am
image

 

இலங்கையின் சராசரி குடும்பம் ஒன்றிற்காக அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் தொகை இவ்வருடம் ஜுலை மாதத்திற்குள் 48 இலட்சமாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள  தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை 26 இலட்சம் அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்திற்காக அரசாங்கம் பெற்ற கடன் தொகை 22,11471 ஆகும். 

இவ்வருடம் ஜூலை மாதம் வரையில் ஒரு குடும்பத்திற்காக அரசினால் பெறப்பட்ட கடன் தொகை 48,19256 என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை 26,06563 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில் பெறப்பட்ட கடன்கள் காரணமாக ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை சுமார் 65 வீதத்தால் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன்கள் காரணமாக ஒரு குடும்பத்திற்கு பெறப்பட்ட கடன் தொகை வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன.

2022-24 காலப்பகுதியில் தனிநபர் கடன் தொகை 104,287 ஆக அதிகரித்துள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.

48 இலட்சமாக அதிகரித்துள்ள குடும்பம் ஒன்றிற்காக அரசாங்கம் பெற்ற கடன் - பேராசிரியர் வெளியிட்ட தகவல்  இலங்கையின் சராசரி குடும்பம் ஒன்றிற்காக அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் தொகை இவ்வருடம் ஜுலை மாதத்திற்குள் 48 இலட்சமாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள  தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை 26 இலட்சம் அதிகரித்துள்ளது.2019 ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்திற்காக அரசாங்கம் பெற்ற கடன் தொகை 22,11471 ஆகும். இவ்வருடம் ஜூலை மாதம் வரையில் ஒரு குடும்பத்திற்காக அரசினால் பெறப்பட்ட கடன் தொகை 48,19256 என சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்படி, ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை 26,06563 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.உள்நாட்டில் பெறப்பட்ட கடன்கள் காரணமாக ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை சுமார் 65 வீதத்தால் அதிகரித்துள்ளது.வெளிநாட்டுக் கடன்கள் காரணமாக ஒரு குடும்பத்திற்கு பெறப்பட்ட கடன் தொகை வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன.2022-24 காலப்பகுதியில் தனிநபர் கடன் தொகை 104,287 ஆக அதிகரித்துள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement