• Sep 17 2024

சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்- சபா.குகதாஸ் கோரிக்கை!

Sharmi / Dec 12th 2022, 2:58 pm
image

Advertisement

சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் ஏற்பட்ட காலநிலை அனர்த்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாடுகள், எருமைகள் ,ஆடுகள் என ஆயிரத்துக்கு அதிகமான கால் நடைகள் இறந்துள்ளன.  இதனால் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல கோடி ரூபா பெறுமதியான தங்களது கால்நடைகளை இழந்துள்ளமையால் அவர்களது வாழ்வாதார மீட்சிக்கு அரசாங்கம் விரைவாக இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க செயலாளர்கள்  துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்- சபா.குகதாஸ் கோரிக்கை சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,அண்மையில் ஏற்பட்ட காலநிலை அனர்த்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாடுகள், எருமைகள் ,ஆடுகள் என ஆயிரத்துக்கு அதிகமான கால் நடைகள் இறந்துள்ளன.  இதனால் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல கோடி ரூபா பெறுமதியான தங்களது கால்நடைகளை இழந்துள்ளமையால் அவர்களது வாழ்வாதார மீட்சிக்கு அரசாங்கம் விரைவாக இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க செயலாளர்கள்  துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement