• Apr 28 2024

crownson / Dec 4th 2022, 9:28 am
image

Advertisement

அம்பாறை மாவட்டம் கல்முனை அல்.ஹாமியா அரபுக்கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை 3ம் திகதி மன்னர் பைசல் கேட்போர் கூடத்தில் அரபுக்கல்லூரியின் அதிபர் ஏ.சி தஸ்தீக் மதனி தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பேராதனை பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பிரிவின்  பேராசிரியரும் இக்கல்லூரியின் பழைய மாணவருமான  கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம்  பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதுடன்  கௌரவ அதிதிதியாக கல்லூரியின் ஆளுநர் சபைத்தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த  அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் மலர் அறிமுக உரையினை அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் ஏ.எல் நாஸிர் கனி மேற்கொண்டார்.

இங்கு 105 மெளலவிகளுக்கும் 23 ஹாபிழ்களுக்கும் பட்டம் வழங்கி  வைக்கப்பட்டது .

தமது திறமைகளை வெளிப்படித்திய இக்கல்லூரியின் பழையை மாணவர்கள் சிலரும் இக்கல்லூரியின் வளர்ச்சிக்குப்பங்காற்றிய முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆளுனர் சபை உறுப்பினர்கள் சிலரும் இங்கு பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள் இக்கல்லூரியின் பழைய மாணவர்கள்,பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

நிகழ்வின் இறுதியாக விழாக்குழுத் தலைவரும்  முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான அப்துல் கபூரின் நன்றி உரையுடன் குறித்த நிகழ்வு நிறைவடைந்தது.

மேலும்  அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  இஸ்லாமாபாத்  பகுதியில் அமைந்துள்ள  அல்-ஹாமியா அரபுக் கல்லூரி கலாபீடம் ஸ்தாபிக்கப்படும்போது இந்நாட்டில் சுமார் 75 அரபுக் கல்லூரிகளே காணப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை ஷர்கிய்யா அரபுக் கல்லூரி சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி என்பனவற்றுக்கு அடுத்தபடியாக 1979.12.07 ஆம் திகதி உருவாக்கப்பட்ட மிகப்பிரசித்தி பெற்ற மூன்றாவது அரபுக் கல்லூரியாக கல்முனை அல்- ஹாமியா அரபுக் கல்லூரி விளங்குகின்றது. 

அல்-ஹாமியா அரபுக் கல்லூரி ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இது 1979 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உன்னத நோக்கம் கொண்ட ஓர் அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் பட்டமளிப்பு விழா அம்பாறை மாவட்டம் கல்முனை அல்.ஹாமியா அரபுக்கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை 3ம் திகதி மன்னர் பைசல் கேட்போர் கூடத்தில் அரபுக்கல்லூரியின் அதிபர் ஏ.சி தஸ்தீக் மதனி தலைமையில்  இடம்பெற்றது.இந்நிகழ்வில்  பேராதனை பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பிரிவின்  பேராசிரியரும் இக்கல்லூரியின் பழைய மாணவருமான  கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம்  பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதுடன்  கௌரவ அதிதிதியாக கல்லூரியின் ஆளுநர் சபைத்தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.குறித்த  அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் மலர் அறிமுக உரையினை அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் ஏ.எல் நாஸிர் கனி மேற்கொண்டார்.இங்கு 105 மெளலவிகளுக்கும் 23 ஹாபிழ்களுக்கும் பட்டம் வழங்கி  வைக்கப்பட்டது . தமது திறமைகளை வெளிப்படித்திய இக்கல்லூரியின் பழையை மாணவர்கள் சிலரும் இக்கல்லூரியின் வளர்ச்சிக்குப்பங்காற்றிய முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆளுனர் சபை உறுப்பினர்கள் சிலரும் இங்கு பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள் இக்கல்லூரியின் பழைய மாணவர்கள்,பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்நிகழ்வின் இறுதியாக விழாக்குழுத் தலைவரும்  முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான அப்துல் கபூரின் நன்றி உரையுடன் குறித்த நிகழ்வு நிறைவடைந்தது.மேலும்  அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  இஸ்லாமாபாத்  பகுதியில் அமைந்துள்ள  அல்-ஹாமியா அரபுக் கல்லூரி கலாபீடம் ஸ்தாபிக்கப்படும்போது இந்நாட்டில் சுமார் 75 அரபுக் கல்லூரிகளே காணப்பட்டன.அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை ஷர்கிய்யா அரபுக் கல்லூரி சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி என்பனவற்றுக்கு அடுத்தபடியாக 1979.12.07 ஆம் திகதி உருவாக்கப்பட்ட மிகப்பிரசித்தி பெற்ற மூன்றாவது அரபுக் கல்லூரியாக கல்முனை அல்- ஹாமியா அரபுக் கல்லூரி விளங்குகின்றது. அல்-ஹாமியா அரபுக் கல்லூரி ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இது 1979 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உன்னத நோக்கம் கொண்ட ஓர் அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement