• Apr 27 2024

யாழில் பாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை ஆட்டய போட்ட கிராம சேவகர் ?

harsha / Dec 3rd 2022, 10:18 am
image

Advertisement

கிராம சேவகர் என்று தன்னை போலியாக அடையாளப்படுத்திய  நபர் ஒருவர் , வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்  சென்று உள்ள சம்பவம்  கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று  இடம்பெற்றுள்ளது.

தனியார் மருத்துவமனைக்குச்  சென்று விட்டு கோண்டாவில் மேற்கில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 75 வயதான பாட்டியிடம்,  மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தன்னை கிராம அலுவலர் என்று போலியாக அடையாளப் படுத்தியுள்ளார்.

உங்களுக்கு 70,000 ரூபாய் உதவித்தொகை வந்துள்ளது உடனடியாக என்னுடன் வாருங்கள் என்று தெரிவித்து குறித்த நபர் அழைத்துள்ளார். அதை உண்மை என்று நம்பி அந்த வயோதிபப்  பெண் சென்றுள்ள நிலையில், நந்தாவில்   பகுதியில் 2 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு குறித்த நபர் தப்பித்துச்  சென்றுள்ளார்.

சம்பவம்   தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை ஆட்டய போட்ட கிராம சேவகர் கிராம சேவகர் என்று தன்னை போலியாக அடையாளப்படுத்திய  நபர் ஒருவர் , வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்  சென்று உள்ள சம்பவம்  கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று  இடம்பெற்றுள்ளது.தனியார் மருத்துவமனைக்குச்  சென்று விட்டு கோண்டாவில் மேற்கில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 75 வயதான பாட்டியிடம்,  மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தன்னை கிராம அலுவலர் என்று போலியாக அடையாளப் படுத்தியுள்ளார். உங்களுக்கு 70,000 ரூபாய் உதவித்தொகை வந்துள்ளது உடனடியாக என்னுடன் வாருங்கள் என்று தெரிவித்து குறித்த நபர் அழைத்துள்ளார். அதை உண்மை என்று நம்பி அந்த வயோதிபப்  பெண் சென்றுள்ள நிலையில், நந்தாவில்   பகுதியில் 2 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு குறித்த நபர் தப்பித்துச்  சென்றுள்ளார்.சம்பவம்   தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement