• Jan 20 2025

விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை! - பிரதி அமைச்சர் உறுதி

Chithra / Jan 20th 2025, 9:01 am
image

 

விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும். விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு உத்தரவாத விலைக்கு மேலதிகமாக 2 ரூபாய் வழங்கப்படும் என விவசாயத்துறை மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். 

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் 1000 மெற்றிக் தொன்னுக்கும் குறைவான அளவில் தான் நெல்லை கொள்வனவு செய்துள்ளது. 

பெருமளவிலான தொகையை பிரதான அரிசி உற்பத்தியாளர்களே கொள்வனவு செய்துள்ளனர். சந்தையில் அரிசித் தட்டுப்பாடு தற்போது தீவிரமடைந்ததற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும்.

மறுபுறம் அரசுக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலைகள்  முறையாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த அரசாங்கங்கள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதையே பிரதான தீர்வாக கொண்டிருந்தது. 

இதற்கமைய பாழடைந்துள்ள அரச நெற்களஞ்சியசாலை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இம்முறை பெருமளவிலான நெல் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும். நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை தீர்மானிக்கப்படும்.  என்றார்.

விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை - பிரதி அமைச்சர் உறுதி  விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும். விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு உத்தரவாத விலைக்கு மேலதிகமாக 2 ரூபாய் வழங்கப்படும் என விவசாயத்துறை மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் 1000 மெற்றிக் தொன்னுக்கும் குறைவான அளவில் தான் நெல்லை கொள்வனவு செய்துள்ளது. பெருமளவிலான தொகையை பிரதான அரிசி உற்பத்தியாளர்களே கொள்வனவு செய்துள்ளனர். சந்தையில் அரிசித் தட்டுப்பாடு தற்போது தீவிரமடைந்ததற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும்.மறுபுறம் அரசுக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலைகள்  முறையாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த அரசாங்கங்கள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதையே பிரதான தீர்வாக கொண்டிருந்தது. இதற்கமைய பாழடைந்துள்ள அரச நெற்களஞ்சியசாலை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இம்முறை பெருமளவிலான நெல் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும். நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை தீர்மானிக்கப்படும்.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement