• May 03 2024

ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் வழக்கு - இரு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக மனு தாக்கல்...!samugammedia

Anaath / Sep 17th 2023, 4:04 pm
image

Advertisement

250 பில்லியன் டொலர்களுக்கான சர்வதேச இறையாண்மைப் பத்திரக் கடனைத் திருப்பிச் செலுத்தாமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் தலைவரான சீன - அமெரிக்க முதலீட்டாளர்- பெஞ்சமின் வே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் 

இந்த வழக்கில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இடையிட்டு இலங்கைக்கு ஆதரவாக மனுக்களை தாக்கல் செய்தன. ஏற்கனவே அமெரிக்கா இந்த வழக்கில் இலங்கைக்கு சார்பாக இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி குறித்த வழக்கை 6 மாதங்கள் பிற்போட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு இந்த இரண்டு நாடுகளும் ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்த மனுக்களின்படி, இலங்கைக்கான தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் அதன் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான நாட்டின் முயற்சிகளை பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் ஆதரிக்கின்றன.

குறித்த வழக்கு, தற்போது இடம்பெறும் மறுசீரமைப்புப் பேச்சுக்களை சீர்குலைக்கக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளதால் இலங்கை கோரிய ஆறு மாத கால அவகாசத்தை நீதிபதி வழங்க வேண்டும் என பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கோரியுள்ளன.

மேலும், கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடிவதற்குள், ஹமில்டனுக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படுமானால், அது நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்குமென மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் வழக்கு - இரு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக மனு தாக்கல்.samugammedia 250 பில்லியன் டொலர்களுக்கான சர்வதேச இறையாண்மைப் பத்திரக் கடனைத் திருப்பிச் செலுத்தாமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் தலைவரான சீன - அமெரிக்க முதலீட்டாளர்- பெஞ்சமின் வே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் இந்த வழக்கில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இடையிட்டு இலங்கைக்கு ஆதரவாக மனுக்களை தாக்கல் செய்தன. ஏற்கனவே அமெரிக்கா இந்த வழக்கில் இலங்கைக்கு சார்பாக இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்படி குறித்த வழக்கை 6 மாதங்கள் பிற்போட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு இந்த இரண்டு நாடுகளும் ஆதரவை வெளியிட்டுள்ளன.இந்த மனுக்களின்படி, இலங்கைக்கான தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் அதன் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான நாட்டின் முயற்சிகளை பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் ஆதரிக்கின்றன.குறித்த வழக்கு, தற்போது இடம்பெறும் மறுசீரமைப்புப் பேச்சுக்களை சீர்குலைக்கக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளதால் இலங்கை கோரிய ஆறு மாத கால அவகாசத்தை நீதிபதி வழங்க வேண்டும் என பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கோரியுள்ளன.மேலும், கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடிவதற்குள், ஹமில்டனுக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படுமானால், அது நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்குமென மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement