• May 27 2025

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பான மகஜர் சிறீதரனிடம் கையளிப்பு

Thansita / May 27th 2025, 6:32 pm
image

நெடுந்தூர சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஆரியகுளம் பகுதியில் உள்ள, வரையறுக்கப்பட்ட யாழ். மாவட்ட தூர சேவைப் பேரூந்து உரிமையாளர்களின் கம்பனி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களும், அவர்களை பிரதிபலிக்கும் சங்கங்களும்  குறித்த மகஜரை வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர போக்குவரத்து சேவை தொடர்பான பிரச்சனைக்கு  விரைவில் தீர்வைப் பெற்றுத்தருமாறு குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


யாழில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பான மகஜர் சிறீதரனிடம் கையளிப்பு நெடுந்தூர சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் ஆரியகுளம் பகுதியில் உள்ள, வரையறுக்கப்பட்ட யாழ். மாவட்ட தூர சேவைப் பேரூந்து உரிமையாளர்களின் கம்பனி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களும், அவர்களை பிரதிபலிக்கும் சங்கங்களும்  குறித்த மகஜரை வழங்கியுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர போக்குவரத்து சேவை தொடர்பான பிரச்சனைக்கு  விரைவில் தீர்வைப் பெற்றுத்தருமாறு குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement