• May 13 2024

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. முட்டை விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி! samugammedia

Egg
Chithra / Apr 20th 2023, 7:33 am
image

Advertisement

இன்று முதல் அமுலாகும் வகையில், முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ், இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை நிற முட்டை 880 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு நிற முட்டை 920 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம், வெள்ளை நிற முட்டை ஒன்று 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்று 46 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலைக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிர்ணய விலைக்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி. முட்டை விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி samugammedia இன்று முதல் அமுலாகும் வகையில், முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ், இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை நிற முட்டை 880 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு நிற முட்டை 920 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.அதேநேரம், வெள்ளை நிற முட்டை ஒன்று 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்று 46 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலைக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிர்ணய விலைக்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement