• Dec 26 2024

கந்தளாயில் குரங்குகளால் தொல்லை : பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Tharmini / Dec 24th 2024, 12:23 pm
image

திருகோணமலை கண்டி பிரதான வீதி 91 ம் கட்டை சந்தியில் ஆர்ப்பாட்டம் மொன்றை இன்று (24) ஊர் மக்களால் ஏற்பாடு செய்யப் பட்டுயிருந்து .

குரங்குகளை எங்காயவது கொண்டு போய் விடுங்க என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்

தினமும் கொத்து கொத்தாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் கந்தளாய் பல்வேறு பகுதிகளிலும் நடமாடி வருவதுடன், இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கந்தளாய் , கந்தலாவே, வேன்றாசம் புர , பேராறு, மற்றும் பேராற்று வெளி . பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நெற்களை சேதப்படுத்துவதும் கடைகளில் காட்சிபடுத்தபட்டுள்ள பொருட்களை நாசப்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களையும் உண்டு வீணாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச மக்கள் பொருட்களை எடுத்துசெல்லும் போது கைகளில் உள்ள உணவு பொதிகளை பிடுங்குவதாகவும், இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பல இடர்களை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பதோடு, இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய சீக்கிரம் கவனம் செலுத்தி பயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் . 






கந்தளாயில் குரங்குகளால் தொல்லை : பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் திருகோணமலை கண்டி பிரதான வீதி 91 ம் கட்டை சந்தியில் ஆர்ப்பாட்டம் மொன்றை இன்று (24) ஊர் மக்களால் ஏற்பாடு செய்யப் பட்டுயிருந்து .குரங்குகளை எங்காயவது கொண்டு போய் விடுங்க என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினார்கள்.இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்தினமும் கொத்து கொத்தாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் கந்தளாய் பல்வேறு பகுதிகளிலும் நடமாடி வருவதுடன், இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கந்தளாய் , கந்தலாவே, வேன்றாசம் புர , பேராறு, மற்றும் பேராற்று வெளி . பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நெற்களை சேதப்படுத்துவதும் கடைகளில் காட்சிபடுத்தபட்டுள்ள பொருட்களை நாசப்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களையும் உண்டு வீணாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.இப்பிரதேச மக்கள் பொருட்களை எடுத்துசெல்லும் போது கைகளில் உள்ள உணவு பொதிகளை பிடுங்குவதாகவும், இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பல இடர்களை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பதோடு, இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய சீக்கிரம் கவனம் செலுத்தி பயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் . 

Advertisement

Advertisement

Advertisement