• Nov 25 2024

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நல்லிணக்கம் முக்கியம்..! - யாழில் நீதி அமைச்சர் தெரிவிப்பு

Chithra / Jan 15th 2024, 5:03 pm
image

 

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று யாழ் ஆரியகுளம் நாக விகாரையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது. 

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  மிகவும் இக்கட்டான காலத்தில் நாட்டினை பொறுப்பெடுத்து நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்குரிய வேலைத்திட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்.

அதன் காரணமாக தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது எனினும் நாட்டில் மேலும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கம்  ஏற்படுமிடத்து நாட்டினை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நாகவிகாரையில் தேசிய நல்லிணக்க சபையின் அங்கத்தவர்களுக்கான நியமனசான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் நீதி அமைச்சர் தலைமையில் நாகவிகாரையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மும்மத தலைவர்களுக்கும் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நல்லிணக்கம் முக்கியம். - யாழில் நீதி அமைச்சர் தெரிவிப்பு  நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இரண்டு நாட்கள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று யாழ் ஆரியகுளம் நாக விகாரையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  மிகவும் இக்கட்டான காலத்தில் நாட்டினை பொறுப்பெடுத்து நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்குரிய வேலைத்திட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்.அதன் காரணமாக தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது எனினும் நாட்டில் மேலும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கம்  ஏற்படுமிடத்து நாட்டினை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.யாழ்ப்பாணம் நாகவிகாரையில் தேசிய நல்லிணக்க சபையின் அங்கத்தவர்களுக்கான நியமனசான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் நீதி அமைச்சர் தலைமையில் நாகவிகாரையில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மும்மத தலைவர்களுக்கும் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement