• May 18 2024

யாழ். அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி! SamugamMedia

Tamil nila / Mar 9th 2023, 5:00 pm
image

Advertisement

யாழ். அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.




விருந்தினர்கள் மாலை அணிவித்து பான்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றி வைத்து நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டு, மாணவர்களின் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.




பாடசாலையின் அதிபர் திரு.விமலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலிகாமம் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.ரவிராஜ் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.





இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. நாகரட்ணம், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. வசந்தன், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க. இலங்கேஷ்வரன், முத்தமிழ் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் வீ. சிவகுமார், சமூக செயற்பாட்டாளர்களான சுபாஷ்கரன், அம்பிகா, பழைய மாணவர்கள், அயற் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி SamugamMedia யாழ். அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.விருந்தினர்கள் மாலை அணிவித்து பான்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றி வைத்து நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டு, மாணவர்களின் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.பாடசாலையின் அதிபர் திரு.விமலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலிகாமம் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.ரவிராஜ் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. நாகரட்ணம், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. வசந்தன், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க. இலங்கேஷ்வரன், முத்தமிழ் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் வீ. சிவகுமார், சமூக செயற்பாட்டாளர்களான சுபாஷ்கரன், அம்பிகா, பழைய மாணவர்கள், அயற் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement