• May 03 2024

யாழ். போதனாவின் மருத்துவக்கழிவுகள் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பும் தரப்பினர்! வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல் SamugamMedia

Chithra / Feb 27th 2023, 12:41 pm
image

Advertisement

அண்மையில்  யாழ் போதனா வைத்தியசாலையில் உருவாக்கப்படுகின்ற மருத்துவக்கழிவுகள் அகற்றப்படும் முறை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. அந்த வகையில் மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வழமையாக தெல்லி்ப்பழை ஆதார வைத்தியசாலையிலுள்ள  எரியூட்டியில் எரிக்கப்பட்டு வந்த நிலையில்,

கொரோனா தொற்று காலப்பதியில் நோயாளிகள் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும்  அதிகளவான கழிவுகளை எரித்து வெளியேற்ற வேண்டிய நிலை காணப்பட்டது. 

அதனால் குறித்த எரியூட்டியானது பழுதடைந்து தற்சமயம் திருத்த வேலைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

புதிய எரியூட்டியைப் பெற்று கோம்பயன் மயானத்தில் வைத்து எரியூட்டத் தீர்மானித்திருந்தாலும் அது தொடர்பில் மீளாய்வு செய்து எதிர்வரும் காலத்தில் பொருத்தமான இடத்தில் வைத்து செயற்படு்த்த  உள்ளோம்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனைத்து இடங்களிலிருந்தும் நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளின் போது கழிவுகள் உருவாக்கப்படும். இது இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான பிரச்சினை. 

தற்சமயம் எரியூட்டி செயற்படாது காணப்பட்டாலும் புதிய எரியூட்டியை நிறுவும் வரை

கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற இடங்களிலுள்ள தனியாருக்குச் சொந்தமான எரியூட்டியில் எரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொாள்ளப்படுகின்றது. 

குறிப்பாக இங்கு 1.300 படுக்கைகள் உள்ளன. இதை விட வெளி நோயாளர் பிரிவில் பல நேயாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கான இரத்த பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ நடவடிக்கைளின் போது மருத்துவக் கழிவுகள் உருவாவதை தவிர்க்க முடியாது. இக் கழிவுகள் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டு முகாமை செய்யப்பட வேண்டும்.

இவ் விடயம் தொடர்பில், இதனோடு சம்பந்தப்படாத பல தரப்பினர் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

மருத்துவக் கழிவுகள் தொடர்பாக பிழையான கருத்துக்களை கூறும் நபர்களும் இங்கே ஏதோ ஒரு மருத்துவத் தேவைக்கு வர வேண்டிய நிலை ஏற்படும். 

இது இம் மாகாணத்திற்குரிய வைத்தியசாலை. மக்களின் நம்பிக்கைக்குரிய முறையில் இயங்கும் வைத்தியசாலையாகக் காணப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான போலியான கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் சில சமயங்களில் வைத்திய சேவைக்கு தாக்கங்களை ஏற்படுத்தப்படுவதுடன், பொதுமக்களுக்கு பீதியான மன நிலையை உருவாக்க வழிவகுக்கும். 

பொது மக்கள் வசிக்கும் இடங்களில் கழிவுகள் உருவாவது யதார்த்தம். குறிப்பாக யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பல்லாயிரக்கணக்கான கழிவுகள் காணப்படுகின்றன. அவற்றை அகற்ற உள்ளூராட்சி மன்றங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் உருவாகும் திரவக் கழிவுகள் பண்ணையில் அமைந்துள்ள திரவக்கழிவகற்றும் பொறிமுறையூடாக சிறப்பாக நடைபெறுகின்றது. 

யாழ் நகர்ப்பகுதியி்ல் ஏனைய அரச, தனியார் தரப்பினரை விட நாம் தான் இவ்வாறான விடயங்களை முறையாக மேற்கொள்கின்றோம்.

இதேவேளை, வைத்தியசாலையில் உருவாகும் பிளாஸ்ரிக் கழிவுகளை மாநகர சபைக்கு அனுப்பி மீள் சுழற்கிக்குட்படுத்தப்படுகின்றது. மேலும் உருவாகும் காட்போட் உள்ளிட்ட பொருட்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதன் முலம்  மீள் சுழற்சிக்கு உள்ளாக்கப்படுகின்றது.

கோம்பயன் இந்து மயானத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் எரியூட்டுவதற்கான அனுமதி மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையால் வழங்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில்  மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் அரச அதிபருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால் ஆளுநரின் செயளாளருக்கு அந்த இடம் பொருத்தமற்றது என கடிதமொன்று அனுப்பப்பட்டதாக எமக்கு  அறியத்தந்ததுடன் அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.  நாம் ஆளுநருடன் தொடர்பு கொண்ட  போது மாகாண காணி அதிகார சபையுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறினார்.

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து 10 கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதியி்ல் எரியூட்டியை நிறுவுவதானது எமது செயற்பாடுகளுக்குச் சாதகமாக அமையும் எரியூட்டி நிரந்தரமாக நிறுவப்படும் வரை

மருத்துவக் கழிவுகளை தனியாருக்கு வழங்கி எரியூட்டும் நிலையைத் தற்காலிகமாகத் தொடரவுள்ளோம்.

ஒரு எரியூட்டியை கொள்வனவு செய்ய 3 கோடி நிதி தேவை அதற்கான எரிபொருட் செலவு 

ஊழியர் செலவு என பல்வேறு செலவுகள் காணப்படுகின்றது.  தற்போதைய நிலையில் பாதுகாப்பாக எரியூட்டுவதற்காகவே தற்காலிகமாக பாதுகாப்பாக எரியூட்டவே அனுப்புகின்றோம்

இதை விட இலங்கையிலுள்ள அனைத்து மருந்துத்தட்டுப்பாடு நிலவுகிறது. சில சமயங்களால் கால தாமதமாக கிடைப்பதுடன்  நன்கொடை மூலமாகவும் கிடைக்கப்பெறுகின்றது. 

தற்போது மருந்துகள் கையிலிருப்பிலிருப்பதுடன், சில மருந்துகள் தட்டுப்பாடாக உள்ள நிலையில் வெளியிலிருந்து நோயாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் போதனா வைத்தியசாலையில் வாள் வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணப்படும் செய்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,

பட்டா ரக வாகனத்தில் வந்த சிலர் பாதுகாவலரை அச்சுறுத்தியதுடன், அருகிலிருந்த மேசையையும் சேதப்படுத்திச் சென்ற சம்பவமே பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்.- என்றார்

யாழ். போதனாவின் மருத்துவக்கழிவுகள் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பும் தரப்பினர் வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல் SamugamMedia அண்மையில்  யாழ் போதனா வைத்தியசாலையில் உருவாக்கப்படுகின்ற மருத்துவக்கழிவுகள் அகற்றப்படும் முறை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. அந்த வகையில் மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,வழமையாக தெல்லி்ப்பழை ஆதார வைத்தியசாலையிலுள்ள  எரியூட்டியில் எரிக்கப்பட்டு வந்த நிலையில்,கொரோனா தொற்று காலப்பதியில் நோயாளிகள் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும்  அதிகளவான கழிவுகளை எரித்து வெளியேற்ற வேண்டிய நிலை காணப்பட்டது. அதனால் குறித்த எரியூட்டியானது பழுதடைந்து தற்சமயம் திருத்த வேலைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய எரியூட்டியைப் பெற்று கோம்பயன் மயானத்தில் வைத்து எரியூட்டத் தீர்மானித்திருந்தாலும் அது தொடர்பில் மீளாய்வு செய்து எதிர்வரும் காலத்தில் பொருத்தமான இடத்தில் வைத்து செயற்படு்த்த  உள்ளோம்.யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனைத்து இடங்களிலிருந்தும் நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளின் போது கழிவுகள் உருவாக்கப்படும். இது இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான பிரச்சினை. தற்சமயம் எரியூட்டி செயற்படாது காணப்பட்டாலும் புதிய எரியூட்டியை நிறுவும் வரைகொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற இடங்களிலுள்ள தனியாருக்குச் சொந்தமான எரியூட்டியில் எரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொாள்ளப்படுகின்றது. குறிப்பாக இங்கு 1.300 படுக்கைகள் உள்ளன. இதை விட வெளி நோயாளர் பிரிவில் பல நேயாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கான இரத்த பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ நடவடிக்கைளின் போது மருத்துவக் கழிவுகள் உருவாவதை தவிர்க்க முடியாது. இக் கழிவுகள் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டு முகாமை செய்யப்பட வேண்டும்.இவ் விடயம் தொடர்பில், இதனோடு சம்பந்தப்படாத பல தரப்பினர் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.மருத்துவக் கழிவுகள் தொடர்பாக பிழையான கருத்துக்களை கூறும் நபர்களும் இங்கே ஏதோ ஒரு மருத்துவத் தேவைக்கு வர வேண்டிய நிலை ஏற்படும். இது இம் மாகாணத்திற்குரிய வைத்தியசாலை. மக்களின் நம்பிக்கைக்குரிய முறையில் இயங்கும் வைத்தியசாலையாகக் காணப்பட்டு வருகின்றது. இவ்வாறான போலியான கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் சில சமயங்களில் வைத்திய சேவைக்கு தாக்கங்களை ஏற்படுத்தப்படுவதுடன், பொதுமக்களுக்கு பீதியான மன நிலையை உருவாக்க வழிவகுக்கும். பொது மக்கள் வசிக்கும் இடங்களில் கழிவுகள் உருவாவது யதார்த்தம். குறிப்பாக யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பல்லாயிரக்கணக்கான கழிவுகள் காணப்படுகின்றன. அவற்றை அகற்ற உள்ளூராட்சி மன்றங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.யாழ்.போதனா வைத்தியசாலையில் உருவாகும் திரவக் கழிவுகள் பண்ணையில் அமைந்துள்ள திரவக்கழிவகற்றும் பொறிமுறையூடாக சிறப்பாக நடைபெறுகின்றது. யாழ் நகர்ப்பகுதியி்ல் ஏனைய அரச, தனியார் தரப்பினரை விட நாம் தான் இவ்வாறான விடயங்களை முறையாக மேற்கொள்கின்றோம்.இதேவேளை, வைத்தியசாலையில் உருவாகும் பிளாஸ்ரிக் கழிவுகளை மாநகர சபைக்கு அனுப்பி மீள் சுழற்கிக்குட்படுத்தப்படுகின்றது. மேலும் உருவாகும் காட்போட் உள்ளிட்ட பொருட்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதன் முலம்  மீள் சுழற்சிக்கு உள்ளாக்கப்படுகின்றது.கோம்பயன் இந்து மயானத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் எரியூட்டுவதற்கான அனுமதி மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையால் வழங்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில்  மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் அரச அதிபருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆளுநரின் செயளாளருக்கு அந்த இடம் பொருத்தமற்றது என கடிதமொன்று அனுப்பப்பட்டதாக எமக்கு  அறியத்தந்ததுடன் அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.  நாம் ஆளுநருடன் தொடர்பு கொண்ட  போது மாகாண காணி அதிகார சபையுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறினார்.யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து 10 கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதியி்ல் எரியூட்டியை நிறுவுவதானது எமது செயற்பாடுகளுக்குச் சாதகமாக அமையும் எரியூட்டி நிரந்தரமாக நிறுவப்படும் வரைமருத்துவக் கழிவுகளை தனியாருக்கு வழங்கி எரியூட்டும் நிலையைத் தற்காலிகமாகத் தொடரவுள்ளோம்.ஒரு எரியூட்டியை கொள்வனவு செய்ய 3 கோடி நிதி தேவை அதற்கான எரிபொருட் செலவு ஊழியர் செலவு என பல்வேறு செலவுகள் காணப்படுகின்றது.  தற்போதைய நிலையில் பாதுகாப்பாக எரியூட்டுவதற்காகவே தற்காலிகமாக பாதுகாப்பாக எரியூட்டவே அனுப்புகின்றோம்இதை விட இலங்கையிலுள்ள அனைத்து மருந்துத்தட்டுப்பாடு நிலவுகிறது. சில சமயங்களால் கால தாமதமாக கிடைப்பதுடன்  நன்கொடை மூலமாகவும் கிடைக்கப்பெறுகின்றது. தற்போது மருந்துகள் கையிலிருப்பிலிருப்பதுடன், சில மருந்துகள் தட்டுப்பாடாக உள்ள நிலையில் வெளியிலிருந்து நோயாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.இதேவேளை யாழ் போதனா வைத்தியசாலையில் வாள் வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணப்படும் செய்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,பட்டா ரக வாகனத்தில் வந்த சிலர் பாதுகாவலரை அச்சுறுத்தியதுடன், அருகிலிருந்த மேசையையும் சேதப்படுத்திச் சென்ற சம்பவமே பதிவாகியுள்ளது.இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்.- என்றார்

Advertisement

Advertisement

Advertisement