• Nov 26 2024

மீண்டும் தொடர் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்...! வெளியான அறிவிப்பு...!

Sharmi / May 7th 2024, 1:59 pm
image

எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொழிநுட்பத்திற்கு அமைவாக கொடுப்பனவுகளை வழங்குவதாக சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி, 72 உறுப்பினர்களை கொண்ட சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் 4 மாதங்களாக தமது கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். 

ஆனால் அந்த உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று(07) மீண்டும் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு பதிலாக, மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை விட்டு வெளியேறும் தொழில் நடவடிக்கையை எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி,

09 - வட மத்திய மாகாணம்

13 - மத்திய மாகாணம்

14 - சப்ரகமுவ மாகாணம்

15 - வடமேற்கு மாகாணம்

16 - தென் மாகாணம்

20 - ஊவா மாகாணம்

21 - மேல்மாகாணங்கள் போன்றவற்றில் வேலைநிறுத்தப் போராட்டம் அமுல்படுத்தப்படும்.

இதற்கு பதில் கிடைக்காத பட்சத்தில் நாடு முழுவதும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் தொடர் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள். வெளியான அறிவிப்பு. எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.தொழிநுட்பத்திற்கு அமைவாக கொடுப்பனவுகளை வழங்குவதாக சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி, 72 உறுப்பினர்களை கொண்ட சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் 4 மாதங்களாக தமது கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். ஆனால் அந்த உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று(07) மீண்டும் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு பதிலாக, மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை விட்டு வெளியேறும் தொழில் நடவடிக்கையை எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.அதன்படி,09 - வட மத்திய மாகாணம்13 - மத்திய மாகாணம்14 - சப்ரகமுவ மாகாணம்15 - வடமேற்கு மாகாணம்16 - தென் மாகாணம்20 - ஊவா மாகாணம்21 - மேல்மாகாணங்கள் போன்றவற்றில் வேலைநிறுத்தப் போராட்டம் அமுல்படுத்தப்படும்.இதற்கு பதில் கிடைக்காத பட்சத்தில் நாடு முழுவதும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement