• Mar 20 2025

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது - ஜனாதிபதி கவலை

Chithra / Mar 20th 2025, 7:19 am
image


தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 06  முறைமைகளில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதன் பிரகாரம் மிகக் குறைந்த அடிப்படை சம்பளத்தை 15 000 ரூபாவினால் அதிகரித்தல், 

மேலதிக நேரக் கொடுப்பனவு அதிகரித்தல் , விடுமுறை நாள் கொடுப்பனவு அதிகரித்தல், 80% வீதத்தினால் வருடாந்த சம்பள அதிகரித்தல், முழுமையான சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரி எல்லையை அதிகரித்தல் என்பவற்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த சம்பள அதிகரிப்பு அரச சேவையில்  அதிகளவானவர்களால் பாராட்டப்படுவதாகவும், அது தொடர்பில் புதிய அரசாங்கத்தின் ஆர்வத்தைப் பாராட்டுவதாகவும் ஜனாதிபதியிடம் கூறிய அரச சேவை  ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகள், தாதியர் சேவையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அவற்றுக்கு துரித தீர்வு பெற்றுத் தருமாறும் கோரினர்.

இதேவேளை இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில்  அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத் திட்டமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில்  நேற்று  இடம்பெற்ற  விசேட  வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

விசேட  வைத்திய நிபுணர் சேவைக்கான சேவை யாப்பு தயாரிப்பது மற்றும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து விசேட  வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகளினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு, அதிகரித்த முழுமையான சம்பளத்திற்கு ஏற்ப இந்த ஆண்டு ஓய்வூதிய கொடுப்பனவு அளவு அதிகரிப்பு, கொடுப்பனவுகள் வழங்குதல் மற்றும் வருமான வரி எல்லையை அதிகரிப்பு என்பன தொடர்பில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு  விசேட வைத்திய நிபுணர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு உட்பட பல திட்டங்கள் அடங்கிய பரிந்துரையை விசேட  வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு சமர்ப்பித்தனர்.


சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது - ஜனாதிபதி கவலை தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மிகக் கூடிய சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 06  முறைமைகளில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதன் பிரகாரம் மிகக் குறைந்த அடிப்படை சம்பளத்தை 15 000 ரூபாவினால் அதிகரித்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு அதிகரித்தல் , விடுமுறை நாள் கொடுப்பனவு அதிகரித்தல், 80% வீதத்தினால் வருடாந்த சம்பள அதிகரித்தல், முழுமையான சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரி எல்லையை அதிகரித்தல் என்பவற்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.இந்த சம்பள அதிகரிப்பு அரச சேவையில்  அதிகளவானவர்களால் பாராட்டப்படுவதாகவும், அது தொடர்பில் புதிய அரசாங்கத்தின் ஆர்வத்தைப் பாராட்டுவதாகவும் ஜனாதிபதியிடம் கூறிய அரச சேவை  ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகள், தாதியர் சேவையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அவற்றுக்கு துரித தீர்வு பெற்றுத் தருமாறும் கோரினர்.இதேவேளை இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில்  அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத் திட்டமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.ஜனாதிபதி அலுவலகத்தில்  நேற்று  இடம்பெற்ற  விசேட  வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.விசேட  வைத்திய நிபுணர் சேவைக்கான சேவை யாப்பு தயாரிப்பது மற்றும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து விசேட  வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகளினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு, அதிகரித்த முழுமையான சம்பளத்திற்கு ஏற்ப இந்த ஆண்டு ஓய்வூதிய கொடுப்பனவு அளவு அதிகரிப்பு, கொடுப்பனவுகள் வழங்குதல் மற்றும் வருமான வரி எல்லையை அதிகரிப்பு என்பன தொடர்பில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு  விசேட வைத்திய நிபுணர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு உட்பட பல திட்டங்கள் அடங்கிய பரிந்துரையை விசேட  வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு சமர்ப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement